»   »  லென்ஸ் பட இயக்குநர் ஜெயப்பிரகாஷுக்கு கொல்லப்புடி சீனிவாஸ் விருது!

லென்ஸ் பட இயக்குநர் ஜெயப்பிரகாஷுக்கு கொல்லப்புடி சீனிவாஸ் விருது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

19வது கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் தேசிய விருது 2015 ஆண்டுக்கான அறிமுக இயக்குநர் விருதை லென்ஸ் என்ற தமிழ் - ஆங்கில படத்திற்காக பெறுகிறார் ஜெயப்பிரகாஷ் ராதா கிருஷ்ணன்.

இந்தியா முழுவதும் ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம், அசாமீஸ், பெங்காலி, கன்னடம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இருந்து 33 திரைப்படங்கள் தேர்வுக்காக பங்கேற்றன. இயக்குநர் சிங்கிதம் சீனிவாசராவ், வசந்த் சாய், நடிகை ரோகினி ஆகியோர் நடுவர்களாக இருந்து லென்ஸ் எனும் திரைப்படத்தை சிறந்த அறிமுக இயக்குநருக்கான திரைப்படமாக தேர்ந்தெடுத்து உள்ளனர்.

Kollapudi Srinivas award to LENS director Jayaprakash

லென்ஸ் திரைப்படம் skype மூலம் உரையாடும் இரண்டு வெவ்வேறு பின்னணியை கொண்ட கதாபாத்திரங்கள் பற்றிய திரைப்படம். இதற்கு முன் அறிமுகம் இல்லாத இரண்டு பேரின் உரையாடலால் நேரும் கடத்தல் சம்பவம் மற்றும் அதை சார்ந்த கதை இது. இதில் அறிமுக இயக்குநரான ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், அரவிந்த் என்ற முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.

Kollapudi Srinivas award to LENS director Jayaprakash

வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை மியூசிக் அகாடமியில் வைத்து நடைபெறவுள்ளது. கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் தேசிய விருது வழங்கும் விழாவில் ரூ 1.5 லட்சம் மற்றும் நினைவு கேடயமும் பரிசாக வழங்கப்படவுள்ளது. ஆண்டுதோறும் இந்த விருது மார்ச் 17 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி வழங்கப்பட்டு வருகிறது.

Kollapudi Srinivas award to LENS director Jayaprakash

இதுகுறித்து விழாக் குழுவைச் சேர்ந்த ஜிவி ராமகிருஷ்ணா, ஜிவி சுப்பா ராவ் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கடந்த பதினெட்டு ஆண்டுகளில் சுனில் தத், ஜெயா பச்சன், நசுரிதீன் ஷா, மிருனாள் சென், கோவிந்த் நிஹாலினி, மணிரத்னம், சேகர் கபூர், அடூர் கோபாலகிருஷ்ணன், அபர்ணா சென், மம்மூட்டி, அக்கினேனி நாகேஸ்வர ராவ், தாசரி நாராயண ராவ், சுப்பிராமி ரெட்டி, ஷோபனா, ஷர்மிளா தாகூர், ஆமிர் கான், சிரஞ்சீவி உள்பட இந்தியாவின் முக்கிய திரை ஆளுமைகள் இந்த விழாவில் பங்கெடுத்துள்ளனர்.

Kollapudi Srinivas award to LENS director Jayaprakash

இந்து விருது ஆழமாக சிந்தித்து, கடுமையாக உழைத்து தங்கள் முதல் படைப்பை எடுக்கும் இயக்குநர்களுக்கானது. இவ்வாறு வெற்றி பெறும் இயக்குநர்களை தங்கள் குடும்பத்தின் பிள்ளையாக நினைத்து ஊக்குவிக்கிறது. இந்த விருது இந்திய அளவிலான முதல் பட இயக்குநர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விருதின் இன்னொரு நோக்கம், இந்த விழாவில் இந்திய சினிமாவின் ஜாம்பாவான்கள் பலர் கலந்து கொண்டு, மிக சிறப்பான உரையாற்றி வருகின்றனர். இவ்வுரையானது இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் நினைவு சொற்ப்பொழிவு நிகழ்வின் சிறப்பம்சமாகும். வரும் காலத்தில் இவர்கள் ஆற்றும் உரை புத்தகமாகவும் வெளியிடப்படவுள்ளது," என்று தெரிவித்துள்ளனர்.

English summary
The prestigious Kollapudi Srinivas Trust award has announced for Debutant Director Jayaprakash Radhakrishnan's for his Lens movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil