»   »  கோல்டன் குளோப்: 7 விருதுகளை அள்ளி லா லா லேண்ட் படம் புதிய சாதனை

கோல்டன் குளோப்: 7 விருதுகளை அள்ளி லா லா லேண்ட் படம் புதிய சாதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

கலிபோர்னியா: அமெரிக்காவில் நடந்த கோல்டன் குளோப் விருது விழாவில் 7 விருதுகளை அள்ளி லா லா லேண்ட் படம் புதிய சாதனை படைத்துள்ளது.

74வது கோல்டன் குளோப் விருது விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள பெவர்லி ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விருது விழாவில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் கலந்து கொண்டார்.

 லா லா லேண்ட்

லா லா லேண்ட்

டேமியன் சேசல் இயக்கத்தில் ரயன் கோஸ்லிங், எம்மா ஸ்டோன் நடிப்பில் வெளியான லா லா லேண்ட் ஹாலிவுட் படம் அதிகபட்சமாக 7 விருதுகள் பெற்றது. சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், சிறந்த திரைக்கதை, இசை, பாடல் என 7 பிரிவுகளில் விருதுகளை அள்ளியது.

 சாதனை

சாதனை

ஒரு படத்திற்கு 7 கோல்டன் குளோப் விருதுகள் கிடைத்துள்ளது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக 1975ம் ஆண்டு வெளியான ஒன் ப்ளூ ஓவர் தி குக்கூஸ் நெஸ்ட் மற்றும் 1978ம் ஆண்டு ரிலீஸான மிட்நைட் எக்ஸ்பிரஸ் படங்கள் 6 விருதுகள் பெற்றது தான் சாதனையாக இருந்தது.

 பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்ற நடிகை பிரியங்கா சோப்ரா விருது விழாவில் கலந்து கொண்டு விருதை அறிவித்தார். அவர் தங்க நிற டிசைனர் கவுனில் வந்திருந்தார்.

 மெரில் ஸ்ட்ரீப்

மெரில் ஸ்ட்ரீப்

பிரபல ஹாலிவுட் நடிகை மெரில் ஸ்ட்ரீப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. லா லா லேண்ட் படம் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பிரிவுகளிலும் விருது வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Ryan Gosling starrer La La Land has got seven awards at the 74th Annual Golden Globe Awards function held in California. La La Land is the first movie that has got seven awards at the function.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil