»   »  ஆஸ்கர் 2017: லா லா லாண்ட் படத்துக்கு சிறந்த நடிகை, இயக்கம் உள்பட 6 விருதுகள்!

ஆஸ்கர் 2017: லா லா லாண்ட் படத்துக்கு சிறந்த நடிகை, இயக்கம் உள்பட 6 விருதுகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

2017-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழாவில் 6 விருதுகளை வென்றுள்ளது லா லா லாண்ட்.

2017-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது.

La La Land wins 5 academy awards

இதில் லா லா லாண்ட் படம் மட்டும் 14 பிரிவுகளில் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. டைட்டானிக் படத்துக்குப் பிறகு இத்தனை பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட படம் லா லா லாண்ட்தான்.

டாமியன் சாஸில் (Damien Chazelle) இயக்கத்தில், ரியான் கோஸ்லிங், எம்மா ஸ்டோன் நடிப்பில் உருவாகியுள்ள படம் லா லா லாண்ட்.

இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் இந்தப் படத்துக்கு

சிறந்த நடிகை (எம்மா ஸ்டோன்)
சிறந்த இயக்குர் (டாமியன் சேஸில்),
சிறந்த ஒளிப்பதிவாளர் (லினஸ் சான்கிரன்),
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு (டேவிட் வாஸ்கோ, சான்டி ரினால்ட்ஸ்),
சிறந்த ஒரிஜினல் இசை (ஜஸ்டின் ஹர்விட்ஸ் - சிட்டி ஆப் ஸ்டார்ஸ்...)

சிறந்த ஒரிஜினல் பாடல் (ஜஸ்டின் ஹர்விட்ஸ், பென்ஜ் பாஸக் மற்றும் ஜஸ்டின் பால் - லா லா லாண்ட்) ஆகிய 6 விருதுகள் கிடைத்துள்ளன.

English summary
Damien Chazelle Hollywood romantic movie La La Land has won 6 Oscar awards including best actress and direction.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil