»   »  விருதுகள்

விருதுகள்

Subscribe to Oneindia Tamil

இந்தியாவின் ஆஸ்கார் விருது மீண்டும் கனவாகவே போய்விட்டது.

சிறந்த அந்நிய மொழி திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை அமீர் கானின் "லகான்" வெல்லும் என்று இந்தியாவேகடும் ஜுரத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது வீணாகிப் போனது.

போஸ்னியா-ஹெர்சகோவினா நாட்டின் "நோ மேன்ஸ் லேன்ட்" என்ற திரைப்படம் "லகானை"த் தோற்கடித்துஇவ்விருதைத் தட்டிச் சென்றது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று (திங்கள்கிழமை, மார்ச் 25, 2002) நடந்த ஆஸ்கார் விருதுவழங்கும் விழாவில் இவ்வறிவிப்பு வெளியானது.

"லகானு"க்கு ஆஸ்கார் விருது கிடைக்காதது இந்திய ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் சோகத்தையும்அளித்துள்ளது.

இருந்தாலும் 14 ஆண்டு கால இடைவெளிக்குப் பின் ஒரு இந்தியப் படம் ஆஸ்கர் விருதுக்காகச் சென்றதேபெருமைதான் என்று ரசிகர்கள் தங்களைத் தேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் உள்ள கிராம விவசாயிகளுக்கும் இங்கிலாந்து கிரிக்கெட்அணியினருக்கும் இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியில் விவசாயிகள் வெற்றி பெற்று இந்தியாவின்மானத்தைக் காப்பாற்றுவதுதான் "லகான்" கதை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

கடந்த ஆண்டு வெளியாகி, இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடிய "லகானி"ன் ஹீரோவான நடிகர் அமீர்கானேஇப்படித்தைத் தயாரித்தார். அஷுதோஷ் கோவாரிக்கர் இப்படத்தை இயக்கினார்.

இந்தியாவிலேயே பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்று தன் கிரீடத்தில் சுமந்து கொண்டிருக்கும் "லகான்"இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட ஒரே இந்தியப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் கடந்த 1957ம் ஆண்டு மெஹ்பூபா கானின் "மதர் இந்தியா"வும், 1988ல் மீரா நாயரின் "சலாம்பாம்பே"யும் அந்நிய மொழி திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil