»   »  கௌரவ ஆஸ்கர் விருது நாயகன் ஜாக்கிசான்

கௌரவ ஆஸ்கர் விருது நாயகன் ஜாக்கிசான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: நடிகர் ஜாக்கி சானுக்கு சிறந்த வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது இன்று வழங்கப்பட்டது.

ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடந்தது. இந்த விழாவில் 24 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

jackie

இதில் சிறந்த வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது நடிகர் ஜாக்கி சானுக்கு வழங்கப்பட்டது. காமெடி, கரணம் தப்பினால் மரணம் என்ற வகையில் சண்டையிடும் திறன், சண்டைகளில் புதுமையை புகுத்துவது, மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்துவது உள்ளிட்ட திறமைகளை உடையவர் ஜாக்கி சான்.

அவர் 1978-ஆம் ஆண்டு சீன மொழியில் நடித்த ஸ்னேக்ஸ் இன் தி ஈகிள்ஸ் ஷாடோ திடைப்படம் மிகப் பெரிய திருப்புமுனையாக இருந்தது. 1980-இல் நடித்த தி பிக் பிரால் என்ற திரைப்படமே அவரது முதல் ஹாலிவுட் படமாகும்.

தற்காப்புக் கலைகளில் சிறந்து விளங்கும் ஜாக்கி சான், சீனாவின் மிகப் பெரிய நகரமான ஹாங்காங்கில் 1954-ஆம் ஆண்டு பிறந்தவர். நடிகர், இயக்குநர், சண்டை பயிற்சியாளர், தற்காப்புக் கலைஞர், பாடகர், காமெடியன் உள்ளிட்ட பன்முகத் திறமைகளை பெற்றுள்ளவர் ஜாக்கி.

அமெரிக்க நடன அமைப்புக்கான விருதுகள், சர்வதேச இந்திய திரைப்பட அகாதெமி விருதுகள், பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு விருதுகள், டே டைம் எம்மி விருதுகள், ஹாலிவுட், ஹாங்காங் விருதுகள் உள்ளிட்டவை பெற்றுள்ளார்.

அவர் நடித்த ரஷ் ஹவர், ஷாங்காய் நூன், ஆர்ட் ஆஃப் தி டிராகன், போலீஸ் ஸ்டோரி உள்ளிட்ட படங்கள் சிறந்த படங்களாக அமைந்தன.

English summary
Lifetime achievement oscar award was given to Actor Jackie Chan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil