»   »  விருதுகள்

விருதுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

50-வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலைப் பார்த்த பலருக்கும் அதிர்ச்சியாகவும்,ஆச்சரியமாகவும் இருந்திருக்கும்.

வழக்கமாக குறைந்தபட்சம் 3க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெறும் மலையாள சினிமா இந்த முறைசிறந்த மாநில மொழித் திரைப் படத்தைத் தவிர வேறு ஒரு விருதும் பெறவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.

விருதுக்காக பிறந்தவர்கள் நாங்கள், மற்ற மொழிப் படங்களை விட முற்றிலும் தரமான படைப்புஎங்களுடையது, விருதுகள் எங்களைத் தேடி வரும் என்றெல்லாம் அடிக்கடி பெருமையுடன் கூறிக்கொள்வது மலையாள சினிமாக்காரர்களின் வழக்கம்.

குறிப்பாக தமிழ் சினிமாக்காரர்களை மட்டம் தட்டுவது என்றால் அவர்களுக்கு திருநெல்வேலிஅல்வாவை, கொம்புத் தேனில் கலக்கி சாப்பிடுவது மாதிரி.

மற்ற மொழிகளில் தரம் இல்லை, நல்ல நடிகர்கள் இல்லை, நல்ல இயக்குனர்கள் இல்லை,குப்பையைக் கொட்டுகிறார்கள் என்ற எண்ணமே பெரும்பாலான மலையாள திரையுலகினருக்குஇருந்து வருகிறது.

அதை தமிழில் நடிக்கும் மலையாள நடிகைகளே வெளிப்படையாகப் பேசி தமிழ் நடிகர்களைவெறுப்பேற்றுவதும் உண்டு.

ஆனால், அந்த மாயையை சமீப காலமாக தமிழ் சினிமா உடைத்தெறிந்து வருகிறது.

தமிழ் சினிமாவுக்கு தேசிய விருது என்றால் கமல்ஹாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமேஎன்ற நிலை மாறி இப்போது பலரும் அவார்டுகளை அள்ளிக் குவித்து வருகிறார்கள்.

ஆனால் மலையாளத்தில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இந்த ஆண்டு ஒரே ஒரு விருதுடன்அவர்கள் அதிர்ச்சியில் தள்ளப்பட்டுள்ளார்கள். இதற்கு என்ன காரணம் என்பதை விரிவாக ஆராயத்தேவையில்லை.

ஆனால் யார் காரணம் என்பதை ஒரே வரியில் சொல்லி விடலாம். அவர்தான் ஷகீலா. மலையாளத்திரையுலகில் வீசிய ஷகீலா, மரியா, ஷர்மிலி அலையில் நல்ல படங்களையே காணவில்லை.

விருதுகளைப் பெற்றுத் தரும் மம்மூட்டி, மோகன்லால் போன்றோர் கூட மசாலா படங்களில் நடிக்கஆரம்பித்து விட்டனர். மரங்களைச் சுற்றி டான்ஸ் எல்லாம் ஆடுகின்றனர்.

பாட்டுக்கும், டான்ஸுக்கும் மலையாள திரையுலகினர் இப்போது முக்கியத்துவம் கொடுக்கத்தொடங்கியுள்ளனர். இதனால் படத்தின் தரம் குறைந்து விட்டது. அத்தோடு கதைகள் அங்குவலுவுடன் இல்லை.

திடீரென்று நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்த திலீப் புதுமை படைக்கிறேன் பேர்வழி என்றுஒற்றைப்பல், கூனன் என வித்தியாமான ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால், அவையெல்லாம் எந்தவிதத்திலும் மலையாளத் திரையுலகிற்கு உதவவில்லை.

இப்போது மலையாள திரையுலகில் கதைப் பஞ்சம் வந்து விட்டது. நல்ல நடிகர்கள் ஓய்ந்துவிட்டார்கள். டைரக்டர்களைக் காணவில்லை. செயற்கைத்தனம் வந்து விட்டது.

தரமான படங்கள் என்றாலே மலையாளப் படங்கள் தான் என்ற நிலை இருந்தது. இப்போது அதைப்பொய்யாக்கி வியாபாரரீதியிலும், தரத்திலும் முன்னணிக்கு வந்து கொண்டுள்ளது தமிழ் சினிமா.

குறிப்பாக மூத்த நடிகர்கள் விக், ஒட்டுப் பல், கலர் சட்டைகள் போட்டுக் கொண்டு தங்கள் வயதைக்குறைக்க முயன்றும், நடிக்க முயன்றும் தோற்றுக் கொண்டிருக்க நல்ல கதைகளோடு நிறையஇளவட்டங்கள் தமிழில் சாதிக்க ஆரம்பித்துள்ளன.

இன்னொரு புள்ளி விவரம் தெரியுமா. இந்தியில் கடந்த ஆண்டு வெளியான படங்களில் வெற்றிபெற்ற படங்கள் வெறும் 3 சதவீதமே. தமிழில் 37 சதவீதம்!.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil