»   »  கைவிட்ட "ஆய்தஎழுத்து", கைகொடுத்த "யுவா"!

கைவிட்ட "ஆய்தஎழுத்து", கைகொடுத்த "யுவா"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மணிரத்தினம் தயாரித்த ஒரே படத்திற்கு இருவிதமான ரிசல்ட் கிடைத்துள்ளது.

ஆர்ப்பாட்டமும், பந்தாவும் நிரம்பிய சினிமாவுலகில் இயக்குநர் மணிரத்னம் ஒரு தனிப்பிறவி. தனது படங்களைபேச வைத்துவிட்டு தான் பேசாமல் இருந்து விடுவார்.

கதை ரெடியாகிவிட்டால், பூஜை எதுவும் இல்லாமல் நேராக படப்பிடிப்புக்குப் போய்விடுவது இவரது வழக்கம்.எலுமிச்சை பழம் நசுக்குவது கூட கிடையாது.

சீரியஸாக ஒரு படம் எடுப்பார். அடுத்து ஜாலியாக ஒரு படம் எடுப்பார். அந்த வகையில், கன்னத்தில் முத்தமிட்டால்படத்துக்குப் பிறகு, அவர் எடுத்த ஜாலி படம்தான் ஆய்த எழுத்து.

இந்தப் படத்தை தமிழில் மட்டுமின்றி, இந்தியிலும் யுவா என்ற பெயரில் தயாரித்தார். இரண்டிலும் பெரிய பெரியநட்சத்திரங்களை சேர்த்து படத்தை இளமைத் திருவிழாவாக்கியிருந்தார்.

யுவாவில் அஜய் தேவ்கன் (கஜோலின் கணவர்), அபிஷேக் பச்சன், விவேக் ஓபராய், ராணி முகர்ஜி, கரீனா கபூர்,இஷா தியோல் ஆகியோரும், ஆய்த எழுத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, இஷா தியோல்ஆகியோரும் நடித்திருந்தனர்.

ஆனால் இரு படங்களும் வசூலில் பிளாப் ஆகி விட்டன.

இருந்தாலும் வெனீஸ் நகரில் அடுத்த மாதம் நடைபெறும் 61வது திரைப்பட விருது வழங்கும் விழாவில்,விருதுக்குத் தகுதி வாய்ந்த படமாக யுவா தேர்வாகியுள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்ள இரு படங்களையும் விண்ணப்பித்திருந்தார் மணிரத்னம். இதில் யுவா மட்டுமேவிருது விழாவில் பங்கேற்க தேர்வாகியுள்ளது. ஆய்த எழுத்து தேர்வாகவில்லை.

இப்போது மணிரத்னம் தனது அடுத்த படத்துக்கான கதையை ரெடி செய்து வருகிறார். இதற்காக சென்னைஅண்ணாசாலை மேம்பாலம் அருகே உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ரூம் போட்டுள்ளார்.

கதை விவாதத்தில் கூட யாருமில்லையாம். தனியாகத்தான் கதையை பில்ட் அப் செய்கிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil