»   »  விருதுகள்

விருதுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்காக எனக்கு விருது கிடைக்க காரணம் மணி ரத்னம் அங்கிள்தான்என்று தன்னடக்கமாகவும், உற்சாகமாகவும் கூறுகிறார் குட்டி நட்சத்திரம் கீர்த்தனா.

இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திர விருதைப் பெற்றுள்ளார் கீர்த்தனா. விருதுகிடைத்த சந்தோஷத்தில் துள்ளிக் கொண்டிருக்கிறார்.

முகம் கொள்ளாத மகிழ்ச்சியுடன் விருது குறித்து கூறுகையில்,

எல்லாவற்றிற்கும் மணி அங்கிள்தான் காரணம். அவர் தான் என்னை நன்கு வேலை வாங்கி, நடிக்கவைத்தார். நான் அடம் பிடித்தபோதெல்லாம் கூட கோபமே படாமல், சாக்லேட் கொடுத்து, தாஜாசெய்து நடிக்க வைத்தார். விருதுக்கு அவர்தான் காரணம் என்கிறார் கீர்த்தனா.

ஏ.ஆர்.ரஹ்மானும் மணி ரத்னத்தையே பாராட்டுகிறார். நானும், மணி சாரும்இணையும்போதெல்லாம் இதுபோன்ற வெற்றிகளும், விருதுகளும் சகஜமாகி விட்டது. மணி சார்விரைவில் பூரண நலம் பெற்றுத் திரும்ப வேண்டும். அவருடன் சேர்ந்து இதுபோல மேலும் பலமாயாஜாலங்களை செய்ய காத்திருக்கிறேன் என்றார்.

பிராந்திய மொழி ஒன்றுக்கு 5-வது முறையாக தேசிய விருது கிடைத்திருப்பது உலகத்தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் கிடைத்துள்ள மிகப் பெரிய கெளரவம் என்று வைரமுத்துவும்புளகாங்கிதப்பட்டுள்ளார்.

5-வது முறையாக சிறந்த பாடலாசிரியருக்கான விருதைப் பெற்றுள்ள வைரமுத்து தற்போதுமலேசியாவில் உள்ளார். அங்கிருந்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் பாடல்கள் வெறும் வரிகள் மட்டுமல்ல,இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து பல திக்குகளிலும் சிதறிக் கிடக்கும் தமிழ் நெஞ்சங்களில்உறைந்து கிடக்கும் உணர்ச்சிகள்தான் அந்தப் படத்திற்காக நான் எழுதிய பாடல்கள் என்றுஉணர்ச்சிப் பெருக்குடன் கூறியுள்ளார்.

நண்பா, நண்பா படத்தில் சிறப்பாக நடித்த சந்திரசேகர் சிறந்த துணை விருது பெற்றுள்ளார். அவர்கூறுகையில், அந்தப் படத்தில் நான் மிகக் கடுமையாக உழைத்து நடித்திருந்தேன். அதற்கு கிடைத்தபரிசுதான் இந்த விருது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil