twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாதிப்பான்யா நம்மாளு... '1917' விஷூவல் எபெக்ட்ஸ் டீமில் நம்மூர்காரங்க இவ்ளோ பேர் இருந்தாங்களா?

    By
    |

    Recommended Video

    List of all the winners at Oscars 2020 - Video

    சென்னை: ஆஸ்கர் விழாவில், அதிக விருதுகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட 1917 படம், மூன்று விருதுகளை மட்டுமே பெற்றிருக்கிறது.

    அதில் ஒன்று, சிறந்த விஷூவல் எபெக்ட்டுக்கான விருது. இந்த விஷூவல் எபெக்ட் டீமில் பணியாற்றியவர்களில் அதிகமானோர் நம்மூர்காரர்கள் என்பது இப்போது தெரியவந்துள்ளது.

    ஜார்ஜ் மேக்கே, லான்ஸ் கார்போரல், மார்க் ஸ்ட்ராங்ல், ஆண்ட்ரூ ஸ்காட் உட்பட பலரின் நடிப்பில் சாம் மெண்டிஸ் இயக்கிய படம், இது.

    எப்படி எடுத்தாங்க?

    எப்படி எடுத்தாங்க?

    இரண்டாம் உலகப் போர் பற்றிய படமான இது, உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் சாதனைப் படைத்தது. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது போன்ற பிரமையை ஏற்படுத்தும் இதன் ஒளிப்பதிவு, இதை எப்படி எடுத்தாங்க? என்று ஆச்சரியத்தை அளித்தது. அதற்கு பாராட்டுகளும் கிடைத்தன. இறுதியில் ஒளிப்பதிவாளர் ரோஜர் டீக்கின்ஸுக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்துவிட்டது.

    3 விருதுகள் மட்டுமே

    3 விருதுகள் மட்டுமே

    பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்த இந்தப் படத்துக்கு சிறந்த ஒலிக்கலவை, ஒளிப்பதிவு மற்றும் விஷூவல் எபெக்ட்ஸ் என வெறும் 3 விருதுகள் மட்டுமே கிடைத்தது, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. சிறந்த இயக்குனருக்கான விருது இதன் இயக்குன சாம் மென்டஸூக்கு கிடைக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. கிடைக்கவில்லை.

    இந்தியர்களும் தமிழர்களும்

    இந்தப் படத்தின் விஷூவல் எபெக்ட்ஸ் பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில் அதற்கு விருது கிடைத்திருக்கிறது. இந்த விஷூவல் எபெக்ட்ஸ் பிரிவில் பல இந்தியர்களும் தமிழர்களும் பணியாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. இதில் பணியாற்றியுள்ள அருண்குமார் என்பவர் ட்விட்டரில் இத்தகவலை தெரிவித்துள்ளார். அதில் அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

    சிவஞானம், துரைபாண்டி

    சிவஞானம், துரைபாண்டி

    இந்நிலையில், அந்தப்படத்தின் டைட்டில் கார்டில், விஷூவல் எபெக்ட்ஸில் பணியாற்றிய வர்களில், தமிழர்கள், இந்தியர்கள் பெயர்களே அதிகமாக உள்ளன. அருண்குமார், சதீஷ்குமார், அருண் பாலபாஸ்கர சந்திரன், ஶ்ரீகாந்த் பத்ரா, கார்த்திக் பரத்வாஜ், ராஜேந்திர ரெட்டி, சந்தோஷ்குமார், விகாஸ்குமார், குணால் ராய், சாய்குமார், தோட்டா சாய்குமார், பரத், பிரீத்தம் ஷா, சிவஞானம், துரைபாண்டி என்று நீள்கிறது இந்திய பெயர்கள்.

    இதுதான் 1917 கதை

    இதுதான் 1917 கதை

    உலகம் முழுவதும் பாராட்டப்பட்ட இந்த படத்தின் கதை இதுதான்! 1917 ஆம் ஆண்டில் பிரான்சின் ஒரு பகுதியில் முகாமிட்டிருந்த ஜெர்மன் படைகள், திடீரென பின் வாங்குகின்றன. அங்கு முகாமிட்டிருக்கும் பிரிட்டீஷ் ராணுவம், தனக்கான வெற்றி என நினைத்து முன்னேற முயற்சிக்கிறது. ஆனால், இது அவர்களின் தந்திரம் என்பது மற்றொரு பகுதியில் இருக்கும் பிரிட்டீஸ் ஜெனரலுக்கு தெரிய வர, இந்த தகவலை அங்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

    அந்த 1600 பேர்

    அந்த 1600 பேர்

    இத்தகவல் சேரவில்லை என்றால் 1600 வீரர்கள் பரிதாபமாக உயிரிழப்பார்கள். இதற்காக, டாம் பிளேக், வில் ஸ்காஃபீல்ட் என்ற இரண்டு வீரர்களை அனுப்புகிறார், ராணுவ ஜெனரல். டாம் பிளேக் செல்ல காரணம், அந்த 1600 பேரில் அவரது அண்ணன், லெப்டினன்ட் ஜோசப் பிளேக்கும் ஒருவர். இருப்பதோ குறைவான கால அளவு. அதற்குள் அத்தகவலை கொண்டு சேர்த்தார்களா, இல்லையா என்பதுதான் கதை.

    English summary
    Many Indians/Tamils had Worked on Oscar Winning 1917 Movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X