»   »  வாலி, சுப்பு ஆறுமுகத்துக்கு எம்.ஜி.ஆர். விருது

வாலி, சுப்பு ஆறுமுகத்துக்கு எம்.ஜி.ஆர். விருது

Subscribe to Oneindia Tamil
Kamalahasan with Vali

கவிஞர் வாலி, சுப்பு ஆறுமுகம் ஆகியோருக்கு எம்.ஜி.ஆர். விருதும், பொற்கிழியும் எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் வழங்கப்படும் என அதன் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் எம்.ஜி.ஆரின் 92ம் ஆண்டு பிறந்த நாள் விருது வழங்கும் விழா வருகிற 24ம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை, பி.டி.தியாகராயர் அரங்கத்தில் நடக்கிறது.

இந்த விழாவின்போது, வாலி, சுப்பு ஆறுமுகம் ஆகியோருக்கு எம்.ஜி.ஆர். விருதும், பொற்கிழியும் வழங்கப்படுகிறது.

குஜராத் மாநில உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பு.ரா.கோகுலகிருஷ்ணன் விழாவுக்கு தலைமை தாங்கி விருதுகளை வழங்குகிறார்.

ஜனநாயக முன்னேற்ற கழகத் தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன், புலவர் புலமைப்பித்தன், நடிகர் ராஜேஷ் ஆகியோர் வாழ்த்துரையாற்றுகின்றனர்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil