»   »  மிருனாள் சென்னுக்கு பால்கே விருது

மிருனாள் சென்னுக்கு பால்கே விருது

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிசம்பர் 04, 2004

மிருனாள் சென்னுக்கு பால்கே விருது

இந்தியாவின் பிரபல சினிமா இயக்குநர்களில் ஒருவரான மிருனாள் சென்னுக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்படுகிறது.

இந்திய சினிமாவில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு தாதா சாகிப் பால்கே விருது வழங்கிகெளரவிக்கிறது. 2003-ம் ஆண்டுக்கான பால்கே விருது மிருனாள் சென்னுக்கு வழங்கப்படுகிறது.

அடுத்த மாதம் 2ம் தேதி டெல்லியில் நடக்கும் 51-வது தேசிய சினிமா விருது வழங்கும் விழாவில் மிருனாள் சென்னுக்கு தாதாசாகிப் பால்கே விருதை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வழங்குகிறார்.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவரான மிருனாள் சென் இந்தி, வங்காளி, ஒரியா, தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமானபடங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கிய கரிஜ் படம் உலக அளவில் புகழ் பெற்ற படமாகும். இப்படம் 1983ம் ஆண்டில் நடைபெற்ற கேன்ஸ், வெனிஸ்,பெர்லின் திரைப்பட விழாக்களில் விருது பெற்றது.

இந்திய அரசு ஏற்கனவே பத்மபூஷண் விருது வழங்கி இவரைக் கெளரவித்துள்ளது. 1998-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரைமாநிலங்களவை உறுப்பினராகவும் மிருனாள் சென் பணியாற்றியுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil