Don't Miss!
- News
பயங்கர குழப்பம்.. அதிமுக யாரை வேட்பாளராக அறிவித்தாலும்.. அடித்துச் சொன்ன அமைச்சர் ராஜகண்ணப்பன்!
- Finance
2 நாளில் ரூ.18,000 கோடியை இழந்த LIC.. எல்லாம் அதானி குழுமத்தால் வந்த பிரச்சனை!
- Lifestyle
வாஸ்துப்படி வீட்டின் எந்த திசையில் குப்பை தொட்டியை வைக்க வேண்டும் தெரியுமா?
- Sports
இந்திய அணியில் உள்ள பெரிய வீக்னஸ்.. அதிக இழப்பை தரலாம்.. ரோகித்திற்கு இர்ஃபான் பதான் எச்சரிக்கை
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Automobiles
டாடாவோட கதையை முடிக்க பிளான்.. ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
கண்ணான கண்ணே பாடலுக்காக… தேசிய விருது பெற்றார் டி இமான் !
சென்னை : டெல்லியில் 67வது தேசிய திரைப்பட விருதுகள் 2019 ஆம் ஆண்டு வெளியான மற்றும் அந்த ஆண்டில் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு இன்று விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் இசையமைப்பாளர் டி இமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
வேட்டி கட்டிய தமிழன் நான்... தேசிய விருது பெற்ற விஜய் சேதுபதி... ஹாப்பி அண்ணாச்சி!
தேசிய விருது பெற்ற டி இமானுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

தேசிய விருதுகள்
தேசிய திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, 2019-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டன. அசுரன் சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த நடிகராக தனுஷ் அறிவிக்கப்பட்டார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகராக விஜய் சேதுபதியும் , விஸ்வாசம் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளராக டி.இமானும் அறிவிக்கப்பட்டனர். பார்த்திபனின் ஒத்த செருப்பு திரைப்படத்துக்கு சிறப்பு ஜூரி விருது சிறந்த ஒலிப்பதிவுக்கான விருது ரசூல் பூக்குட்டிக்கும் அறிவிக்கப்பட்டது. மேலும், சிறந்த குழந்தை நட்சத்திரமாக நாக விஷால் அறிவிக்கப்பட்டார்.

சிறந்த இசையமைப்பாளர்
இதையடுத்து டெல்லியில் இன்று 67வது தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் விஸ்வாசம் திரைப்படத்தில் இடம் கண்ணான கண்ணே பாடலுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை டி இமான் பெற்றுக்கொண்டோர். அவருக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இவ்விருதை வழங்கினார்.

மகிழ்ச்சி அடைகிறேன்
விருது பெற்றதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டி இமான், கண்ணான கண்ணே பாடலுக்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். கமர்ஷியல் திரைப்படங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் இது. இந்த விருதை அனைத்து அப்பாக்களுக்கும், மகள்களுக்கும் சமர்பணம் செய்கிறேன் என்று கூறினார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Recommended Video

தாமரையின் வரியில்
அஜித்,நயன்தாரா நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் விஸ்வாசம் குடும்ப பின்னணி கொண்ட இந்த திரைப்படம் மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக கண்ணான கண்ணே பாடல் அனைவரையும் கவர்ந்தது. இந்த பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடி இருந்தார், பாடலாசிரியர் தாமரை பாடல் வரிகளை எழுதி இருந்தார்.