»   »  'என் கட்டளையே சாசனம்..!' - நந்தி விருதுகளை அள்ளிய 'பாகுபலி'

'என் கட்டளையே சாசனம்..!' - நந்தி விருதுகளை அள்ளிய 'பாகுபலி'

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐதராபாத் : ஆந்திர அரசின் 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளுக்கான நந்தி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.

2015-ம் ஆண்டு நந்தி விருதுக்கான சிறந்த படமாக பாகுபலி தேர்வாகி உள்ளது. 2014-ம் ஆண்டுக்கான சிறந்த பட விருதை 'லெஜண்ட்' படமும், 2016-ம் ஆண்டுக்கான நந்தி வருதை 'பெல்லி சூப்புலு' படமும் பெறுகின்றன.

Nandi award for baahubali team

'பாகுபலி' திரைப்படம் இந்திய சினிமாவில் ஒரு சாம்ராஜ்யம் என்று சொல்லும் அளவுக்கு வசூலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றது. பாகுபலி படம் இருபாகமாக வெளியாகி பெரும் ஆதரவைப் பெற்றது.

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஆந்திர அரசின் உயரிய விருதான நந்தி விருது பாகுபலி' படத்திற்கும், அதில் நடித்தவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த இயக்குநருக்கான விருதை எஸ்.எஸ்.ராஜமௌலி பெறுகிறார். சிறந்த துணை நடிகைக்கான விருதை 'ராணி சிவகாமி தேவி'யாக நடித்த ரம்யா கிருஷ்ணன் பெறுகிறார். சிறந்த வில்லன் நடிகருக்கான விருதை 'பாகுபலி' படத்தில் பல்வாள்தேவனாக நடித்த ராணா பெறுகிறார்.

English summary
'Baahubali' is the best film for Nandi Award 2015. Ramya Krishnan who has acted as Rani Sivagami Devi in 'Baahubali' awarded for best supporting actress.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X