twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மேனகாவால் முடியாததை.. கீர்த்தி சுரேஷ் சாதித்தார்.. தாயை மிஞ்சிய பாசக்கார அழகு மகள்!

    |

    சென்னை: தேசிய விருது பெறவேண்டும் என்று நினைத்த அம்மா மேனகாவின் கனவை நனவாக்கியுள்ளார் அவரது மகள் கீர்த்தி சுரேஷ். அம்மாவினால் சாதிக்க முடியாததை மகள் சாதித்து காட்டியுள்ளார். தான் பெற்ற விருதை தனது அம்மாவிற்கு டெடிகேட் செய்துள்ளார் கீர்த்தி.

    சினிமா துறைக்கு இந்திய அரசால் வழங்கப்படும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. லோக்சபா தேர்தல் காரணமாக மூன்று மாதம் தள்ளிப்போன

    66வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த தமிழ் படமாக பாரம் தேர்வானது.

    மறைந்த நடிகை சாவித்ரி வாழ்க்கையை மையமாக வைத்து தெலுங்கில் வெளிவந்த ‛மகாநடி படத்தில் நடித்தமைக்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் இப்படம் ‛நடிகையர் திலகம்' என்ற பெயரில் மொழிமாற்றமாகி வெளியானது. இரு மொழிகளிலும் சக்கை போடு போட்ட படம் ரசிகர்களால் பாராட்டுக்களை அள்ளியது. சாவித்திரியாகவே வாழ்ந்திருந்தார் கீர்த்தி சுரேஷ். அப்போதே அவர் விருது பெற வாய்ப்பு உள்ளதாக சினிமா ரசிகர்கள் கணித்திருந்தனர். இந்த நிலையில்தான் நேற்று அறிவிக்கப்பட்ட தேசிய விருதில் சிறந்த நடிகையாக தேர்வாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

    தேசிய விருது பெற்ற நடிகைகள்

    தேசிய விருது பெற்ற நடிகைகள்

    தமிழ் நடிகைகளில் ஶ்ரீதேவி,சரண்யா பொன்வண்ணன், பிரியாமணி,சுதா, சுகாசினி,ஷோபா,லக்ஷ்மி ஆகியோர் இதுவரை தேசிய விருது பெற்றுள்ளனர். இதில் மறைந்த நடிகை ஶ்ரீதேவி இந்தி படம் மாம் படத்திற்காக அவர் மறைவிற்கு பிறகு கொடுக்கப்பட்டது. தற்போது கீர்த்தி சுரேஷ் பெற்றுள்ளார்.

    அம்மாவிற்கு அளித்த கீர்த்தி சுரேஷ்

    அம்மாவிற்கு அளித்த கீர்த்தி சுரேஷ்

    இந்த விருதினை தனது அம்மாவிற்கு டெடிகேட் செய்வதாக கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ். தேசிய விருது வாங்க வேண்டும் என்பது அம்மாவின் ஆசை. ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. மகா நடிக்காக எனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த விருது அறிவிக்கப்பட்ட உடன் முதலில் சந்தோசப்பட்டது என் அம்மாதான் என்று கூறியுள்ளார் கீர்த்தி.

    நடிகை மேனகா

    நடிகை மேனகா

    கீர்த்தி சுரேசின் அம்மா மேனகாவும் நடிகைதான். எண்பதுகளில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, மலையாளத்தில் புகழ்க்கொடி நாட்டியவர் பிறகு, மலையாள சினிமாவிலேயே மையம்கொண்டவர், கேரளாவின் மருமகள் ஆனார். அம்பிகா ராதா காலத்தில் சினிமாவிற்குள் நுழைந்த அவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    சாதித்த மகள்

    சாதித்த மகள்

    கவர்ச்சி காட்டாத கதாநாயகி என்ற பெயர் பெற்ற மேனகா ஓப்போல் படத்தில் நடித்து மலையாள ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். அந்த படத்திற்கு அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் பல விருதுகளைப் பெற்ற அந்த படம் மேனகாவிற்கு விருது பெற்றுத்தரவில்லை.

    தேசிய விருது பெற வேண்டும் என்று ஆசைப்பட்ட மேனகாவின் கனவை அவரது மகள் கீர்த்தி சுரேஷ் நனவாக்கிவிட்டார். அம்மாவினால் திரைத்துரையில் சாதிக்க முடியாததை மகளாக கீர்த்தி சாதித்து விட்டார்.

    English summary
    Keerthy Suresh, winner of the National Film Award for Best Actress for her sterling act in Mahanati, a Telugu biopic on yesteryear star Savitri.Dedicating the award to her mother, yesteryear star Menaka, keethi says that her mother often used to tell her family about how she had missed the national award for the best actress for her maiden film in Malayalam, Oppol.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X