twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேசிய விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் கிரீஷ் குல்கர்னி, சிறந்த நடிகை வித்யா பாலன்

    By Shankar
    |

    டெல்லி: 59 வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தியோல் என்ற மராத்தி படத்தில் நடித்த கிரீஷ் குல்கர்னி சிறந்த நடிகராகவும், தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்த வித்யா பாலன் சிறந்த நடிகையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் தி டர்ட்டி பிக்சர். இதில் சில்க் ஸ்மிதாவாக நடித்திருந்தார் வித்யா பாலன்.

    வாகை சூட வாவுக்கு விருது

    சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருது வாகை சூடவா தமிழ்ப் படத்துக்குக் கிடைத்துள்ளது.

    அழகர்சாமியின் குதிரை படம் சிறந்த பொழுது போக்குப் படமாக தேர்வாகியுள்ளது. இதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய அப்புக்குட்டிக்கு சிறந்த துணை நடிகர் விருது கிடைத்துள்ளது.

    ஆரண்ய காண்டம் படத்துக்கு சிறந்த எடிட்டிங் (பிரவீண் - ஸ்ரீகாந்த்), சிறந்த புதுமுக இயக்குநருக்கான (தியாகராஜன் குமாரராஜா) இந்திராகாந்தி விருதுகள் கிடைத்துள்ளன.

    ஷாரூக்கானின் சயின்ஸ் பிக்ஷன் படமான ரா ஒன்னுக்கு சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸுக்கான விருது கிடைத்துள்ளது.

    தேசிய அளவில் சிறந்த படத்துக்கான விருதினை பியாரி மொழியில் வெளியான முதல் படமான 'பியாரி (Byari)'க்கும், மராத்திப் படமான தியோலுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த இந்திப் படத்துக்கான விருது ஓனிர் இயக்கிய 'ஐ யாம்' (I Am) படத்துக்குக் கிடைத்துள்ளது.

    விருதுப் பட்டியல்:

    சிறந்த இயக்குநர் : கோவிந்தர் சிங் (அன்னே கோடே தா டான்)
    சிறந்த திரைக்கதை: விகாஸ் பேஹல் மற்றும் நிதீஷ் திவாரி (சில்லர் பார்ட்டி)
    சிறந்த வசனம்: கிரீஷ் குல்கர்னி (தியோல்)
    சிறந்த குழந்தை நட்சத்திரம்: பார்த்தோ குப்தே (ஸ்டான்லி கா டப்பா)
    சிறந்த குழந்தைகள் படம்: சில்லர் பார்ட்டி (இந்தப் படத்தில் நடித்த அனைத்து குழந்தைகளுக்கும் விருது)

    சிறந்த பெங்காலி படம்: ரோஞ்சனா ஆமி ஆர் அஷ்போ நா
    சிறந்த டோக்ரி படம்: திலேஷ் பாஷியா கோய்
    சிறந்த கன்னட படம்: கூர்ம அவதார்

    சிறந்த மணிப்புரி படம்: பிஜிகீ மணி
    சிறந்த மராத்தி படம்: ஷாலா
    சிறந்த பஞ்சாபி படம்: அன்னே கோடே தா டான்

    சிறந்த நடன இயக்குநர்: போஸ்கோ மற்றும் சீஸர் (ஜிந்தகி மிலேகி நா தபோரா)

    நடுவர் குழுவின் பரிசுக்குரிய படம்: ரோஞ்சனா ஆமி ஆர் அஷ்போ நா

    சிறந்த இசை: நீல் தத்தா (ரோஞ்சனா ஆமி ஆர் அஷ்போ நா)

    சிறந்த பாடலாசிரியர்: அமிதாப் பட்டாச்சார்யா (ஐ யாம்)

    சிறந்த மேக்கப்: விக்ரம் கெயிக்வாட் (பால் கந்தர்வா, தி டர்ட்டி பிக்சர்)

    சிறந்த காஸ்ட்யூம்: நீதா லுல்லா (பால் கந்தர்வா, தி டர்ட்டி பிக்சர்)

    சிறந்த பாடகர் (பெண்): ரூபா கங்குலி

    English summary
    The 59th National Awards list has been released. Vidhya Balan and Girish Kulkarni are adjudged as best actress and actor for their outstanding performances in films The Dirty Picture and Deool.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X