»   »  வாவ்.... தேசிய விருது பெறுவதில் "ஹாட்ரிக்" அடித்த தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி!

வாவ்.... தேசிய விருது பெறுவதில் "ஹாட்ரிக்" அடித்த தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் - வெற்றிமாறன் இணைந்து தயாரித்த விசாரணை படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது.

63-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டது. இதில், சிறந்த தமிழ் படம் என்ற விருதை விசாரணை படம் பெற்றுள்ளது.


உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட லாக்கப் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார்.


3 விருதுகள்...

3 விருதுகள்...

விசாரணை படத்திற்கு மொத்தம் 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த தமிழ்ப்படம் மட்டுமின்றி, இப்படத்தின் எடிட்டர் கிஷோருக்கு சிறந்த எடிட்டிங்கிற்கான விருதும், சிறந்த துணை நடிகருக்கான விருது சமுத்திரக்கனிக்கும் கிடைத்துள்ளது.


வெனிஸ் திரைப்பட விழா...

வெனிஸ் திரைப்பட விழா...

கடந்த 71 வருட வரலாற்றில் வெனிஸ் திரைப்பட விழாவில் போட்டிப்பிரிவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப்படம் என்ற பெருமைக்கு உரியது ‘விசாரணை' படம்.
காக்காமுட்டை...

காக்காமுட்டை...

இந்தப் படத்தை தனுஷ் - வெற்றிமாறன் இணைந்து தயாரித்துள்ளனர். முன்னதாக இவர்கள் இருவரும் இணைந்து தயாரித்த காக்காமுட்டை படமும் தேசிய விருதைப் பெற்றது.
ஆடுகளம்...

ஆடுகளம்...

இதேபோல், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் பொல்லாதவன், ஆடுகளம் என இரண்டு படங்களில் நடித்துள்ளார். இதில் ஆடுகளம் படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட பிரிவுகளில் வெற்றிமாறனுக்கும் தேசிய விருது கிடைத்தது.
வடசென்னை...

வடசென்னை...

தற்போது மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை என்ற படத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்படம் இரண்டு பாகங்களாக தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.


English summary
The National Awards were announced in New Delhi on Monday. Visaranai won Best Tamil Film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil