»   »  நவ்யாவுக்கு ரஷ்ய விருது

நவ்யாவுக்கு ரஷ்ய விருது

Subscribe to Oneindia Tamil

ரஷ்யாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் நவ்யா நாயருக்கு சிறந்தநடிகைக்கான விருது கிடைத்துள்ளது.

ரஷ்யாவில் கடந்த 10 நாட்களாக சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.இந்த விழாவில் இஸ்லாமியக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படங்கள் மட்டுமேகலந்து கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் நவ்யா நாயர் நடித்துள்ள சாய்ரா என்ற படம் இந்த விழாவில்பங்கேற்றது. இப்படத்திற்கு பட விழாவில் பெரும் வரவேற்பு கிடைத்ததாம்.அத்தோடு நவ்யா நாயருக்கு சிறந்த நடிகை விருதையும் இப்படம் பெற்றுக்கொடுத்துள்ளது.

சாய்ரா படத்தில் சாய்ரா அலி என்ற கேரக்டரில் நடித்துள்ளார் நவ்யா. டிவிசெய்தியாளராக வருகிறார் நவ்யா. இப்பட விழாவில் நவ்யா நாயர் கலந்துகொள்ளவில்லை. தற்போது அவர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ளார்.


அங்கு நடிகர் வினீத் ஏற்பாடு செய்துள்ள கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கச்சென்றுள்ளார் நவ்யா.

எனவே நவ்யாவால் ரஷ்யாவுக்கு செல்ல முடியவில்லை. அவரது சார்பில் சாய்ரா படஇயக்குனர் பிஜூ, சிறந்த நடிகை விருதை பெற்றுக் கொண்டாராம்.

இதே பட விழாவில் மீரா ஜாஸ்மின் முஸ்லீம் பெண்ணாக நடித்திருந்த பாடம் ஒண்ணுஒரு விளப்பம் மற்றும் பெருமழைக் காலம் ஆகிய மலையாளப் படங்களும்திரையிடப்பட்டன.

இந்த இரு படங்களும் கேரளாவில் மீராவுக்கு பெரும் பாராட்டையும், விருதுகளையும்அள்ளிக் கொடுத்து. ஆனால் ரஷ்ய விழாவில் மீராவை வீழ்த்தி நவ்யா விருதைஅள்ளிக் கொண்டு போய் விட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil