»   »  'ஸ்ரீராமராஜ்ஜியம்' படத்துக்காக நயன்தாராவுக்கு உகாதி புரஸ்கார் விருது!

'ஸ்ரீராமராஜ்ஜியம்' படத்துக்காக நயன்தாராவுக்கு உகாதி புரஸ்கார் விருது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீராமராஜ்யம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நயன்தாராவுக்கு உகாதி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

ஸ்ரீ கலா சுதா தெலுங்கு சங்கம் சார்பில் 14-வது உகாதி புரஸ்கார் மற்றும் மகிளா ரத்னா விருது வழங்கும் விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது.

இதில் தமிழக கவர்னர் கே.ரோசய்யா தலைமை விருந்தினராக கலந்துகொண்டு கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

'ஸ்ரீராமராஜ்ஜியம்' என்ற தெலுங்கு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை நயன்தாராவுக்கு உகாதி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. நயன்தாராவுக்கு விருதையும் பாராட்டுச் சான்றிதழையும் கவர்னர் ரோசய்யா வழங்கினார்.

பழம்பெரும் பாடகி பி.வசந்தா, நடனக்கலைஞர் அனிதா குகா உள்பட 4 பேருக்கு மகிளா ரத்னா விருதும், இயக்குனர் பாபு, ஒளிப்பதிவாளர் பி.ஆர்.கே.ராஜு, குழந்தை நட்சத்திரம் பேபி யானி, நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா உள்பட 21 கலைஞர்களுக்கு உகாதி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

English summary
The traditional Ugadi Pruskar Awards distributed yesterday in Chennai. Goverrnor Rosayya was gave away the award to eminent Telugu personalities and film artists. Actress Nayanthara also got the award for her best performance in Sr Ramarajyam.
Please Wait while comments are loading...