»   »  'பெங்களூர் டேஸ்' நஸ்ரியா, '1983' நிவின் பாலிக்கு சிறந்த நடிகை, நடிகர் விருது!

'பெங்களூர் டேஸ்' நஸ்ரியா, '1983' நிவின் பாலிக்கு சிறந்த நடிகை, நடிகர் விருது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர் டேஸ் படத்தில் நடித்ததற்காக நஸ்ரியாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதினை வழங்கியுள்ளது கேரள அரசு.

கேரள அரசின் 45வது சினிமா விருதுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன.

சிறந்த நடிகர்

சிறந்த நடிகர்

சிறந்த நடிகர் விருதை ‘பெங்களூர் டேஸ்', ‘1983' ஆகிய படங்களில் நடித்ததற்காக நிவின் பாலியும், ‘மை லைப் பார்ட்னர்' படத்தில் நடித்ததற்காக சுதேவ் நாயரும் பகிர்ந்துகொள்கின்றனர்.

ப்ரேமம் ஹீரோ

ப்ரேமம் ஹீரோ

நிவின் பாலி, தமிழில் ‘நேரம்' என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான ப்ரேமம் படம் மலையாள திரையுலகை மட்டுமின்றி, இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

நஸ்ரியா

நஸ்ரியா

‘பெங்களூர் டேஸ்', ‘ஓம் சாந்தி ஓஷானா' ஆகிய படங்களுக்காக நஸ்ரியா, சிறந்த நடிகை விருதை பெறுகிறார். இவர், தமிழில் ‘ராஜாராணி', ‘நேரம்', ‘நய்யாண்டி', ‘திருமணம் என்னும் நிக்காஹ்' போன்ற படங்களில் நடித்தவர்.

சிறந்த படம்

சிறந்த படம்

தேசிய விருது பெற்ற ‘ஒட்டாள்' படம், சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநருக்கான விருது ஓராள்போக்கம் படத்துக்காக சனல்குமார் சசிஹரனுக்கு வழங்கப்படுகிறது.

ஜேசுதாஸ்

ஜேசுதாஸ்

‘ஒய்ட் பாய்ஸ்' படப் பாடலுக்காக சிறந்த பாடகர் விருதை ஜேசுதாஸ் பெறுகிறார். இதே படத்துக்கு இசையமைத்த ரமேஷ் நாராயணனுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்படுகிறது.

ஸ்ரேயா கோஷல்

ஸ்ரேயா கோஷல்

ஹவ் ஓல்ட் ஆர் யு படத்தில் பாடியதற்காக ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பின்னணி பாடகி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன பரிசு?

என்ன பரிசு?

சிறந்த படம், சிறந்த இயக்குநர் பிரிவில் 2 லட்சம் ரூபாய் ரொக்கம், பட்டயம் மற்றும் பதக்கம் வழங்கப்படும். சிறந்த நடிகர், நடிகை பிரிவில் ரூ 50 ஆயிரம் ரொக்கம், பட்டயம் மற்றும் பரிசு வழங்கப்படும்.

நஸ்ரியா ஹேப்பி

நஸ்ரியா ஹேப்பி

தனக்கு கிடைத்துள்ள இந்த விருது குறித்து நஸ்ரியா கூறுகையில், "நிச்சயம் இது மிகப் பெரிய அங்கீகாரம் எனக்கு. நான் நடிக்காமல் விலகி இருக்கும் இந்த நேரத்திலும் மக்கள் என்னை நினைவில் வைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது," என்று குறிப்பிட்டார்.

English summary
Young actor Nivin Pauly shared the best actor title with upcoming Sudev Nair while Nazriya Nazim was adjudged the best actress in the 45th Kerala State Film Awards, announced here today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil