»   »  தேசிய விருது: 63 வருடங்களில் புது விருது அறிமுகம்...பெறுபவர் பீட்டர் ஹெய்ன்

தேசிய விருது: 63 வருடங்களில் புது விருது அறிமுகம்...பெறுபவர் பீட்டர் ஹெய்ன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 63 ஆண்டுகளில் இல்லாமல் முதல் முறையாக அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த ஆக்ஷன் டைரக்டருக்கான விருது பீட்டர் ஹெய்னுக்கு கிடைத்துள்ளது.

64வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோக்கர் படத்திற்கு 2 விருதுகள், 24 படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன.

சிறந்த பாடல் ஆசிரியருக்கான விருது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு கிடைத்துள்ளது.

புதிய விருது

புதிய விருது

63 ஆண்டுகளில் இல்லாமல் முதல் முறையாக சிறந்த ஆக்ஷன் டைரக்டருக்கான விருது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பீட்டர் ஹெய்ன்

பீட்டர் ஹெய்ன்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆக்ஷன் டைரக்டர் விருது புலிமுருகன் படத்திற்காக பீட்டர் ஹெய்னுக்கு கிடைத்துள்ளது. பீட்டர் ஹெய்ன் புலி முருகன் படத்தில் கவுரவத் தோற்றத்திலும் நடித்துள்ளார்.

புலிமுருகன்

புலிமுருகன்

மலையாள திரையுலகில் முதல் முறையாக ரூ.100 கோடி வசூலித்த படம் மோகன்லால் நடித்த புலிமுருகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்திற்காக பீட்டருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

தேசிய விருது பெற்றுள்ள பீட்டர் ஹெய்னுக்கு திரையுலக பிரபலங்கள் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்களும் பீட்டரை வாழ்த்தி வருகிறார்கள்.

English summary
Peter Hein has bagged the national film award for best action director(for the movie Puli Murugan), a category that is introduced this year.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil