»   »  ரஜினிகாந்த், கமல் ஹாஸனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அறிவிப்பு

ரஜினிகாந்த், கமல் ஹாஸனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாஸன் ஆகியோருக்கு ஆந்திர அரசின் என்டிஆர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில அரசு ஆண்டுதோறும் என்டிஆர், பிஎன் ரெட்டி, நாகிரெட்டி - சக்ரபாணி, ரகுபதி வெங்கய்யா ஆகியோர் பெயர்களில் திரைத் துறையினருக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இவற்றுடன் சிறப்பு நடுவர் விருது ஒன்றும் வழங்கப்படுகிறது.

NTR awards for Rajinikanth, Kamal Haasan

கடந்த மூன்றாண்டுகளாக இந்த விருதுகள் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு மூன்று ஆண்டுகளுக்கான விருதுகளையும் அறிவித்துள்ளனர்.

2014, 2015 மற்றும் 2016- ஆம் ஆண்டுகளுக்கான விருதுகளை இன்று அறிவித்துள்ளது ஆந்திர அரசு.

2014-ம் ஆண்டுக்கான என்டிஆர் விருது கமல் ஹாஸனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதே ஆண்டுக்கான பிஎன் ரெட்டி விருது இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலிக்கு வழங்கப்படுகிறது.

ரஜினிக்கு

2016-ம் ஆண்டுக்கான என்டிஆர் விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறது. ரகுபதி வெங்கய்யா விருது சிரஞ்சீவிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுப் பட்டியல்:

2014

என்டிஆர் விருது - கமல் ஹாஸன்
பிஎன் ரெட்டி விருது - எஸ்எஸ் ராஜமௌலி
நாகிரெட்டி - சக்ரபாணி - நாராயண மூர்த்தி
ரகுபதி வெங்கய்யா - கிருஷ்ணம் ராஜு
நடுவர் சிறப்பு விருது - சித்தால அசோக் தேஜா

2015

என்டிஆர் விருது - கே ராகவேந்தர் ராவ்
பிஎன் ரெட்டி விருது - திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்
நாகிரெட்டி - சக்ரபாணி - கீரவாணி
ரகுபதி வெங்கய்யா - ஈஸ்வர்
நடுவர் சிறப்பு விருது - பிசி ரெட்டி

2016

என்டிஆர் விருது - ரஜினிகாந்த்
பிஎன் ரெட்டி விருது - போயபட்டி சீனிவாஸ்
நாகிரெட்டி - சக்ரபாணி - கேஎஸ் ராமராவ்
ரகுபதி வெங்கய்யா - சிரஞ்சீவி
நடுவர் சிறப்பு விருது - பரிச்சூரி பிரதர்ஸ்

English summary
The Andhra Govt has announced NTR state awards to Rajinikanth and Kamal Haasan

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil