»   »  எதிர்ப்பார்த்ததைப் போலவே... பேர்ட்மேனுக்கு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது!

எதிர்ப்பார்த்ததைப் போலவே... பேர்ட்மேனுக்கு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: எதிர்ப்பார்த்ததைப் போலவே, அலெஜான்ட்ரோ ஜி இனாரிட்டு இயக்கிய பேர்ட்மேன் படத்துக்கு இந்த ஆண்டின் சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

பெருமை மிக்க இந்த விருதுக்காக அமெரிக்கன் ஸ்னிப்பர், பேர்ட்மேன், பாய்ஹூட், தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல், தி இமிடேஷன் கேம், விப்லாஷ், தி தியரி ஆப் எவ்ரிதிங் மற்றும் செல்மா ஆகிய படங்கள் பரிந்துரைக்கப்பட்டன.

இவற்றில் பேர்ட்மேன் படம் விருதினை வென்றது.

Oscar 2015: Alejandro G. Inarritu's Birdman gets best picture award

கடந்த அக்டோபர் 27-ம் தேதி உலகெங்கும் வெளியானது பேர்ட்மேன் படம். 16.5 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், 76.5 மில்லியன் ஈட்டியது.

மைக்கேல் கீட்டன் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் ஜாக் கலிபியனாகிஸ், எட்வர்டு நார்டன், எமி ரியான் உள்பட பலரும் நடித்திருந்தனர்.

சினிமாவுக்குள் சினிமா...

இந்தப் படத்தின் கதை சினிமாவுக்குள் சினிமா என்ற கருத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. பேர்ட்மேன் படங்களில் நடித்த புகழ்பெற்ற நடிகர் மைக்கேல் கீட்டன் இதில், ரிக்கன் தாமஸ் என்ற முன்னாள் பேர்ட்மேன் ஹீரோவாகவே நடித்துள்ளார்.

ஒரு ரிட்டயர்ட் சூப்பர் ஹீரோ... முன்பு புகழ் மழையில் நனைந்த அவனால் இப்போது சும்மா இருக்க முடியவில்லை. மனசாட்சிக்கும் அவனுக்கும் வாக்குவாதம். இந்த உளவியல் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் சூப்பர் ஹீரோ, ஒரு நாடகத்தை எழுதி நடத்துகிறார். அந்த நாடகத்தில் நடிக்க வரும் ஒரு நடிகர் பின்னர் பெரும் புகழ் பெற்றுவிடுகிறான். ஒரு நாடக நடிகராகவும் தோற்றுப் போன சூப்பர் ஹீரோ அடுத்து என்ன செய்கிறார் என்பது மீதிக் கதை.

மைக்கேல் கீட்டனின் நடிப்பு படத்தில் பிரதானமாகப் பேசப்பட்ட ஒன்று. ப்ளாக் காமெடி என்று சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஒரு பதம் உலா வருகிறதல்லவா.. அந்த ப்ளாக் காமெடி வகைப் படம் இது!

English summary
Birdman, Alejandro González Iñárritu’s satire about an ageing movie star trying to reinvent himself as a credible Broadway actor, took best picture and three other top awards at the 2015 Oscars, upending an awards season that had largely been playing out according to expectations

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil