»   »  தி ரெவனன்ட் படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது பெற்றார் அலெஜான்ட்ரோ இனரிட்டு!

தி ரெவனன்ட் படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது பெற்றார் அலெஜான்ட்ரோ இனரிட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: தி ரெவனன்ட் படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான விருதினை வென்றார் அலெஜான்ட்ரோ இனரிட்டு.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த விருதினை அவர் வென்றுள்ளார்.

லியனார்டோ டி காப்ரியோ, டாம் ஹார்டி நடிப்பில், உண்மை சரித்திர சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் தி ரெவனன்ட்.

Oscar 2016: Best Director Alejandro Inarritu

இந்தப் படம் 12 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

இவற்றில் 3 முக்கிய பிரிவுகளில் விருதினை வென்றுள்ளது. அதில் முக்கியமானது சிறந்த இயக்குநர் விருது.

Oscar 2016: Best Director Alejandro Inarritu

படத்தின் இயக்குநர் அலெஜான்ட்ரோ இனரிட்டு சிறந்த இயக்குநர் விருதினை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வென்றுள்ளார். கடந்த ஆண்டு பேர்டுமேன் படத்துக்காக சிறந்த இயக்குநர் விருதினை அவர் வென்றார்.

அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக சிறந்த இயக்குநர் விருது ஒருவருக்குக் கிடைப்பது ஆஸ்கர் நிகழ்வில் அரிதாக நடக்கும் விஷயமாகும்.

English summary
Alejandro Gonzalez Inarritu has won the Oscar award for best direction for his The Revenant.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil