»   »  சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்றார் லியனார்டோ டிகாப்ரியோ; சிறந்த நடிகை ப்ரி லார்சன்!

சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்றார் லியனார்டோ டிகாப்ரியோ; சிறந்த நடிகை ப்ரி லார்சன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை இந்த ஆண்டு லியனார்டோ டிகாப்ரியோ வென்றார். தி ரெவனன்ட் படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது கிடைத்தது.

ரூம் படத்தில் நடித்த ப்ரி லார்சனுக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

இன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 88வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்தது.

இதில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு

ட்ரம்போ படத்துக்கா பிரையன் கிரான்ஸ்டன்,
தி மார்ஷியன் படத்துக்காக மாட் டாமன்,
தி ரெவனன்ட் படத்துக்காக லியனார்டோ டி காப்ரியோ,
ஸ்டீவ் ஜாப்ஸுக்காக மைக்கேல் ஃபாஸ்பென்டர்,
தி டேனிஷ் கேர்ள் படத்துக்காக எட்டி ரெட்மெய்ன்

ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் தி ரெவனன்ட் படத்தில் மிகச் சிறந்த நடிப்பைத் தந்த லியனார்டோ டிகாப்ரியோவுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.

Oscar 2016: Leonardo Dicaprio and Brie Larson bagged best actors award

சிறந்த நடிகைக்கான போட்டியில்,

கரோல் படத்துக்காக கேட் ப்ளான்செட்,

ரூம் படத்துக்காக ப்ரி லார்சன்

ஜாய் படத்துக்காக ஜெனிபர் லாரன்ஸ்

45 இயர்ஸ் படத்துக்காக சார்லட் ராம்ப்ளிங் மற்றும்

ப்ரூக்ளின் படத்தில் நடித்த சாய்ர்ஸ் ரோனன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் அனைவர் எதிர்ப்பார்ப்பையும் தாண்டி ரூம் பட நாயகி ப்ரி லார்சன் சிறந்த நாயகிக்கான ஆஸ்கர் விருதினை வென்றார்.

Oscar 2016: Leonardo Dicaprio and Brie Larson bagged best actors award
English summary
The Revenant Hero Leonardo Dicaprio and Room actress Brie Larson have won this year Oscar award for Best actor and Actress respectively.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil