»   »  ஆஸ்கர் 2016: டிகாப்ரியோவிற்கு அடுத்த இடத்தைக் கைப்பற்றிய பிரியங்கா சோப்ரா

ஆஸ்கர் 2016: டிகாப்ரியோவிற்கு அடுத்த இடத்தைக் கைப்பற்றிய பிரியங்கா சோப்ரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: ஆஸ்கர் தொடர்பான கூகுள் தேடுதல்களில் ஹாலிவுட் நடிகர் டிகாப்ரியோவிற்கு, அடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறார் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா.

நேற்று கோலாகலமாக நடந்து முடிந்த ஆஸ்கர் விருதுகள் விழாவில், விருது வழங்கும் நபராக, இந்தியா சார்பில் நடிகை பிரியங்கா சோப்ராவும் கலந்து கொண்டார்.

இதன் மூலம் ஏ.ஆர்.ரகுமான், ரசூல் பூக்குட்டிக்குப் பின் ஆஸ்கர் விழாவில் கலந்து கொண்ட 3 வது இந்தியர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

நேற்று நடந்து முடிந்த ஆஸ்கர் விருதுகள் விழாவில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டதால், பெரும்பாலான இந்திய ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசித்துள்ளனர். ஆஸ்கர் விழாவில் விருது வழங்குபவர்களில் ஒருவராக கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா தனது அசத்தலான நகைகளாலும், உடையலங்காரத்தாலும் பார்ப்பவர்களை கிறங்கடித்தார்.

மற்றுமொரு பெருமை

மற்றுமொரு பெருமை

இந்நிலையில் பிரியங்கா சோப்ராவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக மற்றுமொரு பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது. அதாவது ஆஸ்கர் தொடர்பான கூகுள் தேடுதல்களில் ஹாலிவுட் நடிகர் டிகாப்ரியோ முதல் இடத்தையும், பிரியங்கா சோப்ரா 2 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

சிறந்த படம்

சிறந்த படம்

இதே போல ஆஸ்கர் விழாவில் கலந்து கொண்ட படங்களில் டிகாப்ரியோவின் தி ரெவனன்ட் படம் கூகுளில் அதிகம் தேடப்பட்டிருக்கிறது. இந்தத் தேடலில் தி ரெவனன்ட் படத்திற்கு அடுத்த இடத்தை மேட் மேக்ஸ்: பரி ரோடு திரைப்படம் பிடித்துள்ளது.

சிறந்த இயக்குநர்

சிறந்த இயக்குநர்

இயக்குநர்கள் தேடலில் தி ரெவனன்ட் படத்தின் அலேஜான்ட்ரோ இனரிட்டு முதல் இடத்தையும், ஆடம் மக்கே(தி ஸ்பாட்லைட்) 2 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

கூகுள் தேடலில் டிகாப்ரியோவிற்கு அடுத்த இடத்தை பிரியங்கா சோப்ரா பிடித்திருப்பது, இந்திய ரசிகர்கள் பலரையும், தற்போது மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

English summary
Oscar 2016: Bollywood Actress Priyanka Chopra is the Second most Searched Person in Google Search Trends.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil