twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'அனதர் ரவுண்ட்’ சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றது!

    |

    லாஸ்ஏஞ்சல்ஸ் : சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை அனதர் ரவுண்ட் திரைப்படம் தட்டிச்சென்றது.

    குடிப்பழக்கத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் 2020ம் ஆண்டு வெளியாகி அனைவரின் பாராட்டுக்களை பெற்றது .

    Oscar 2021 : Another Round Wins Oscar for Best International Feature Film

    இத்திரைப்படத்தை தாமஸ் வின்டர்பர்க் ஆல் எழுதி இயக்கி இருந்தார்.

    93 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு பல இடங்களில் நடைபெறுகின்றன. வழக்கமாக டால்பி தியேட்டரில் நடத்தப்பட்டும் இந்த விழா, கொரோனா தொற்றுநோயால் இந்த ஆண்டு பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

    இதில், சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை அனதர் ரவுண்ட் திரைப்படம் வென்றது. இந்த விருதை இயக்குனர் தாமஸ் வின்டர்பெர்க் பெற்றுக்கொண்டார். மேலும், தனது மறைந்த மகள் ஐடாக்கு ஆஸ்கார் விருதை அர்ப்பணிப்பதாக கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய தாமஸ் வின்டர் பெர்க், எனது, மகள் ஜடா இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர், நான்கு நாட்களுக்கு முன் ஒரு வாகன விபத்தில் உயிரிழந்தார் என்று குறிப்பிட்டார். மேலும், நாங்கள், இந்த திரைப்படத்தை அவரது நினைவுச்சின்னமாக நினைக்கிறோம் என்றும் வின்டர்பெர்க் கூறினார்.

    இப்படத்தில் மேட்ஸ் மிக்கெல்சன், தாமஸ போ லார்சன், மாக்னசு மில்லங்கு மற்றும் லார்சு ரான்த் ஆகியோர் நடித்துள்ளனர். ஆசிரியர்கள் தங்களை புதுப்பித்துக்கொள்ள குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். அவர்களின் ஆட்டமும் பாட்டமும் நகைக்சுவை உணர்வுடன் அழகாக படமாக்கி உள்ளார் தாமஸ் வின்டர்பர்க்

    மதுவால் இந்த சமூதாயம் எப்படி அழிவை சந்திக்கிறது, மக்கனை கொன்று குடும்பங்களை எப்படி அழிக்கிறது என்பதை இந்த படம் உணர்ந்தும் என்று தாமஸ் வின்டர் பர்க் கூறினார்.

    English summary
    Oscar 2021 : Another Round Wins Oscar for Best International Feature Film
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X