twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் ஷார்ட் லிஸ்ட்: டாப் 15 படங்களில் இடம்பிடித்தது இந்தியாவின் ஆவண படமான 'ரைட்டிங் வித் ஃபயர்'!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சர்வதேச திரைப்பட பிரிவுக்கான டாப் 15 படங்களில் இந்தியாவின் ஆவண படமான ரைட்டிங் வித் ஃபயர் திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

    Recommended Video

    ஆஸ்கர் போட்டியில் Exitஆன கூழாங்கல்: செம சோகத்தில் விக்னேஷ் சிவன்!

    உலகளவில் சினிமாத்துறையின் சிறந்த படைப்புகளுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய கவுரவம் ஆஸ்கர் விருது.

    அஜித் ஃபேன்ஸ் அடுத்த கொண்டாட்டத்திற்கு ரெடியாகுங்க...இன்று வலிமை அப்டேட் வருது அஜித் ஃபேன்ஸ் அடுத்த கொண்டாட்டத்திற்கு ரெடியாகுங்க...இன்று வலிமை அப்டேட் வருது

    ஆண்டு தோறும் அமெரிக்காவின் ஹாலிவுட் சிட்டி என அழைக்கப்படும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    இறுதிப்பட்டியல் தீவிரம்

    இறுதிப்பட்டியல் தீவிரம்

    2022ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் மார்ச் 27ஆம் தேதி நடை பெறுகிறது. இதனை தொடர்ந்து இறுதிப்பட்டியலுக்கு படங்களை தேர்வு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட டாப் 15 படங்களுக்கான பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது.

    கூழாங்கல் படம் வெளியேறியது

    கூழாங்கல் படம் வெளியேறியது

    இதில் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படம் ஆஸ்கர் ரேஸில் இருந்து வெளியேறியது. விக்னேஷ் சிவன் நயன்தாரா ஆகியோரின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட இப்படத்தை பிஎஸ் வினோத் ராஜ் இயக்கியிருந்தார். ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட இப்படம் சர்வதேச படங்களுக்கான டாப் 15 பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளது.

    'ரைட்டிங் வித் ஃபயர்' ஆவண படம்

    'ரைட்டிங் வித் ஃபயர்' ஆவண படம்

    அதேநேரத்தில் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட மற்றொரு இந்திய படமான ரைட்டிங் வித் ஃபயர் ஆவண படம் சர்வதேச ஆவண படங்களுக்கான டாப் 15 பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தலித் பெண்களால் நடத்தப்படும் இந்தியாவின் ஒரே பத்திரிகையான கபர் லஹரியாவின் எழுச்சியை 'ரைட்டிங் வித் ஃபயர்' ஆவண படம் விவரிக்கிறது. இந்த ஆவணப்படத்தை ரிந்து தாமஸ் மற்றும் சுஷ்மித் கோஷ் இயக்கியுள்ளனர்.

    92 நாடுகளின் படங்கள்

    92 நாடுகளின் படங்கள்

    சர்வதேச திரைப்படப் பிரிவில், 15 படங்கள் இன்னும் சிறந்த படத்துக்கான போட்டியில் உள்ளன. 92 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் இந்தப் பிரிவில் தகுதி பெற்றன. ஜப்பானியப் படமான 'டிரைவ் மை கார்', டென்மார்க்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 'ஃப்ளீ', ஈரானைச் சேர்ந்த அஸ்கர் ஃபர்ஹாதியின் 'எ ஹீரோ' மற்றும் இத்தாலியைச் சேர்ந்த 'தி ஹேண்ட் ஆஃப் காட்' ஆகிய படங்கள் இந்த பிரிவில் முன்னணியில் உள்ளன.

    English summary
    Oscar 2022: India's writing with fire documentary film short listed in Oscar race. Koozhangal ( Pebbles) out of the race.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X