twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் விருது விழாவில் தூள் கிளப்பிய டூன்.. சும்மா இத்தனை விருதுகளை அள்ளி அசத்தல்!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: 94வது ஆஸ்கர் விருது விழாவில் டூன் திரைப்படம் ஒட்டுமொத்தமாக 6 ஆஸ்கர் விருதுகளை அள்ளி அசத்தி உள்ளது.

    சிறந்த ஒலி, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த இசை, சிறந்த எடிட்டிங் மற்றும் சிறந்த தயாரிப்பு என 6 பிரிவுக்கான ஆஸ்கர் விருதையும் தட்டி தூக்கி இருக்கிறது டூன் திரைப்படம்.

    இந்த விருது விழாவில் மொத்தம் 10 பிரிவுகளுக்கு கீழ் டூன் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Oscars 2022: 94வது ஆஸ்கர் விருது விழா.. கண்கவர் ரெட் கார்பெட் நிகழ்ச்சியில் பிரபலங்கள் அசத்தல்!Oscars 2022: 94வது ஆஸ்கர் விருது விழா.. கண்கவர் ரெட் கார்பெட் நிகழ்ச்சியில் பிரபலங்கள் அசத்தல்!

    டூன் இயக்குநர்

    டூன் இயக்குநர்

    இயக்குநர் டெனிஸ் வில்லென்யூ இயக்கத்தில் டிமோதி சாலமட், ஜெண்டாயா நடிப்பில் உருவான இந்த படத்தில் ஏகப்பட்ட ஹாலிவுட் பிரபலங்கள் நடித்துள்ளனர். ஸ்டார் வார்ஸ் படங்கள் உருவாக காரணமான டூன் நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. டூன் படத்தின் முதல் பாகத்திற்கே இத்தனை ஆஸ்கர் விருதுகள் குவிந்து வருவதால், இதன் அடுத்தடுத்த பாகங்கள் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    3 ஆஸ்கர் விருதுகள்

    3 ஆஸ்கர் விருதுகள்

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருது விழா ரெட் கார்பெட் நிகழ்ச்சியுடன் வண்ணமயமாக டால்பி தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஹாலிவுட்டின் அத்தனை முக்கியமான பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர். ஆஸ்கர் விருது விழாவில் டூன் திரைப்படம் இதுவரை 3 விருதுகளை தட்டிச் சென்றிருக்கிறது.

    சிறந்த சவுண்ட்

    சிறந்த சவுண்ட்

    ஆஸ்கர் 2022 விருது விழாவில் சிறந்த ஒலிக்கான விருதை தட்டிச் சென்றது டூன் திரைப்படம். வெஸ்ட் சைட் ஸ்டோரி, பெல்ஃபாஸ்ட், தி பவர் ஆஃப் தி டாக், நோ டைம் டு டை உள்ளிட்ட பெரிய படங்கள் இந்த போட்டியில் இருந்தன. விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் சிறந்த ஒலிக்கான விருதை டூன் தட்டிச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் சிறந்த ஒலிக்கான விருதை பெற்றது.

    சிறந்த ஒளிப்பதிவு

    சிறந்த ஒளிப்பதிவு

    பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் கிரெய்க் ஃப்ரேசர் (Greig Fraser) டூன் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றார். அதிகளவு சிஜி இல்லாமல் ரியல் செட்களுடன் பிரம்மாண்டமாக இந்த படம் படமாக்கப்பட்டு இருந்தது. அதிக வெப்பமான பாலை வனங்களில் அழகாக டூன் படத்தை படம்பிடித்து காட்டி இருந்தார் கிரெய்க் ஃப்ரேசர்.

    சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்

    சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்

    சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான பிரிவில் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் உள்ளிட்ட பெரிய படங்கள் போட்டியில் இருந்தன. ஆனாலும், இந்த விருதையும் டூன் திரைப்படமே தட்டிச் சென்றது. பால் லாம்பர்ட், ட்ரிஸ்டன் மைல்ஸ், பிரைன் கானர், ஜெர்ட் நெஃப்சர் உள்ளிட்டோர் விருது பெற்றுக் கொண்டனர்

    ஒரிஜினஸ் ஸ்கோரும் டூனுக்குத்தான்

    ஒரிஜினஸ் ஸ்கோரும் டூனுக்குத்தான்

    சிறந்த சவுண்ட், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட விருதுகளை வென்ற டூன் திரைப்படம் சிறந்த ஒரிஜினல் ஸ்கோருக்கான விருதையும் தட்டிச் சென்றது. விருது விழாவில் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மர் கலந்து கொள்ளாத நிலையில், அவரது மகள் அவரது நைட் டிரெஸ் உடையில் ஆஸ்கர் விருதை வைத்திருந்ததை எடுத்து காண்பித்தபடி கொடுத்த போஸ் டிரெண்டாகி வருகிறது.

    6 ஆஸ்கர் விருதுகள்

    6 ஆஸ்கர் விருதுகள்

    94வது ஆஸ்கர் விருது விழாவில் 10 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்ட டூன் திரைப்படம் சிறந்த சவுண்ட், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட விருதுகளை வென்ற டூன் திரைப்படம் சிறந்த இசை, சிறந்த எடிட்டிங் மற்றும் சிறந்த தயாரிப்பு என ஒட்டுமொத்தமாக 6 ஆஸ்கர் விருதுகளை வென்று ஆஸ்கர் அரங்கையே அதிர வைத்தது.

    English summary
    The Dune movie dominates the 94th Academy Awards with several high technical awards at the Oscars 2022 grand film festival.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X