»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாம் எங்கே நல்ல படங்களை எடுக்கிறோம்?. உள்ளூரில் விற்க லோக்கல் கள்ளுதானே இறக்கிக் கொண்டிருக்கிறோம் என்று பொரிந்து தள்ளுகிறார் கமல்ஹாசன்.

தைவான் இயக்குனர் ஆங் லீ இயக்கிய திரைப்படமான க்ரெளசிங் டைகர், ஹிட்டன்டிராகன் என்ற படம் 4 ஆஸ்கார் விருதுகைளை பெற்றுள்ளது. ஆண்டுக்கு 1,000படங்களுக்கு மேல் தயாரிக்கும் இந்தியாவில் எடுக்கப்பட்ட ஒரு படம் கூடஆஸ்கருக்கு நாமினேட் கூட ஆகவில்லை.

இதற்கு என்ன காரணம்?

இது குறித்து இந்தி -தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்டு வரும் அபய்என்ற படத்தின் இறுதி கட்ட காட்சிகளில் சென்னை ஏவிஎம் ஸ்டியோவில் நடித்துக்கொண்டிருந்த கமல்ஹாசன் பிரேக்கின் போது அளித்த பேட்டி:

நம் திரைப் படங்கள் குடிக்கிற கள் மாதிரி தான் இருக்கு. கள் சிறந்த பானம் தான்.ஆனால், அது உள்நாட்டில் மட்டும் விலை போகும். நம் திரைப்படங்களும் அதுபோல்தான்.

தமிழர்களை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் நான் ஆஸ்கார் விருதுக்கானபோட்டியில் இடம் பெறுகிறேன்!. ஆனால் உண்மை என்னவென்றால் அகாதமி விருதுகுழுவினர் இந்திய திரைப்படங்களை பெயருக்கு வாங்கிக் கொள்வதுடன் சரி. இந்தநிலைமைக்கு நாம் தான் காரணம்.

நாம் சிறந்த படங்களை எடுக்க முயற்சிக்கிறோம் என்ற எண்ணத்தை அகாதமி விருதுவழங்கும் குழுவினர் மனதில் ஏற்படுத்த நாம் தவறி விட்டோம். சீனாவிலும் இதேநிலைதான் நிலவி வந்தது. அவர்கள் தங்கள் நாட்டவரிடம் உள்ள திறமையைமுழுமையாக உணரும் வரை அவர்கள் திரைப்படத்துறையும் நம் திரையுலகத்தைப்போல்தான் இருந்தது.

அதே போல் நம்மவர்களின் திறமையை நாம் அடையாளம் காணும் வரை அதுகமல்ஹாசனாக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி நம்மால் சர்வதேசஅளவில் அங்கீகாரம் பெற முடியாது.

ஹே ராம் திரைப்படம் கலைப்படமல்ல. இது வியாபார ரீதியான படம் தான். ஹேராம் அயல்நாட்டு படங்களுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல. ஆனால் விருதுகிடைக்கவில்லை. எனக்கு இது பழக்கமாகி விட்டது.

நமது திரைப்படம், ஆஸ்கார் விருதை நிர்ணயம் செய்யும் 200 நடுவர்களிடம்பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம். நமது திரைப்படத்தை லாஸ் ஏஞ்ஜெல்சில்இருக்கும் அகாதமிக்கு அனுப்பிவிட்டு அதை மறந்து விடுகிறோம்.

க்ரெளசிங் டைகர் ஹிட்டன் டிராகன் நான்கு ஆஸ்கார் விருது வாங்கியுள்ளது. இதுசிறந்த படம். தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எனதுமருதநாயகம் படமும் இது போன்றதுதான்.

க்ரெளசிங் டைகர் ஹிட்டன் டிராகனின் வெற்றி ஆசிய சினிமாவுக்கு கிடைத்துள்ளவெற்றி. மன்மேகன் தேசாய் போன்றவர்கள் இப்போது இருந்தால் பல வெற்றிகளைநமக்கு தேடித் தந்திருப்பார்கள்.

நாமும் வெற்றிகளை பெறமுடியும். உதாரணமாக சேகர் கபூரை எடுத்துக் கொள்வோம்.இந்தியர்களுக்காக மிஸ்டர். இந்தியா படத்தை எடுத்தார். மேற்கத்திய மக்களுக்காகஎலிசபத் படத்தை எடுத்தார். அவரால் சிறந்த படம் எடுக்க முடிகிறது என்றால்நம்மாலும் முடியும்.

கிளேடியேட்டரில் நடித்த ரஸ்ஸல் குரோவ்வை சிறந்த நடிகராக ஆஸ்கர்தேர்ந்தெடுத்துள்ளது சரியான தேர்வாக எனக்குத் தெரியவில்லை. காஸ்ட் அவேதிரைப்படத்தில் நடித்திருந்த டாம் ஹாங்ஸ்க்குதான் சிறந்த நடிகர் விருதுகொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவர் ஏற்கனவே இரண்டு முறை ஆஸ்கார்வாங்கிவிட்டார் என்பதைக் காரணம் காட்டி அவருக்கு இந்த முறை ஆஸ்கர் விருதைவழங்காதது தவறு என்கிறார் கமல்

ஐ.ஏ.என்.எஸ்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil