»   »  ஊதா கலரு ரிப்பன்.. ஆஸ்கர் விழாவில் டிரம்பை அசிங்கப்படுத்திய ஹாலிவுட்!

ஊதா கலரு ரிப்பன்.. ஆஸ்கர் விழாவில் டிரம்பை அசிங்கப்படுத்திய ஹாலிவுட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: 7 முஸ்லீம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதித்த அதிபர் டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்ற பிரபலங்கள் நீல நிற ரிப்பன் அணிந்திருந்தனர்.

89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வர அதிபர் டிரம்ப் தடை விதித்தார்.

Oscars 2017: Celebs wear blue ribbon to protest Donald Trump's travel ban

இதை கண்டித்து ஈரானை சேர்ந்த இயக்குனர் அஸ்கர் ஃபர்ஹதி ஆஸ்கர் விழாவை புறக்கணித்தார். இந்நிலையில் முஸ்லீம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதித்த டிரம்பை கண்டித்து ஹாலிவுட் பிரபலங்கள் நீல நிற ரிப்பன் அணிந்து விழாவுக்கு வந்தனர்.

டிரம்பின் சட்டத்திற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க சிவில் லிபர்டீஸ் யூனியன்(ஏசிஎல்யூ) அமைப்புக்கு ஏராளமான ஹாலிவுட் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சிறந்த நடிகைக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ரூத் நெக்கா, சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற கேஸி அஃப்ளெக் உள்ளிட்டோர் நீல நிற ரிப்பன் அணிந்து சிவப்புக் கம்பளத்தில் நடந்தனர்.

English summary
Celebrities including Ruth Negga and Barry Jenkins registered protest against US President Donald Trump's travel ban at the 89th Academy Awards ceremony here by wearing blue ribbons.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil