twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் விருதுகள் 2020.. 1917 மற்றும் ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரிக்கு அடித்தது ஜாக்பாட்!

    |

    Recommended Video

    List of all the winners at Oscars 2020 - Video

    லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த சவுண்ட் மிக்ஸிங் மற்றும் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதுகளை 1917 படமும், சிறந்த சவுண்ட் எடிட்டிங் மற்றும் எடிங்கிற்கான ஆஸ்கர் விருதுகளை ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரி படமும் தட்டிச் சென்றன.

    லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் 92வது ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

    விருது விழாவில், இதுவரை சிறந்த துணை நடிகருக்கான விருது பிராட் பிட்டுக்கும், துணை நடிகைக்கான விருது லாரா டெர்னுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

    மேலும், சில பிரிவுகளுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

    தற்போது சிறந்த சவுண்ட் எடிட்டிங் பிரிவுக்கான விருதை Ford vs Ferrari திரைப்படம் தட்டிச் சென்றது.

     சிறந்த ஒலிக்கலவை, ஒளிப்பதிவு, விஷூவல் எபெக்ட்... விருதுகளை அள்ளும் '1917'... இதுவரை 3 விருது சிறந்த ஒலிக்கலவை, ஒளிப்பதிவு, விஷூவல் எபெக்ட்... விருதுகளை அள்ளும் '1917'... இதுவரை 3 விருது

    சிறந்த சவுண்ட் எடிட்டிங்

    சிறந்த சவுண்ட் எடிட்டிங்

    பிரபல ஹாலிவுட் நடிகர்களான கிரிஸ்டியன் பேல் மற்றும் மேட் டேமன் நடிப்பில் ஜேம்ஸ் மேன்கோல்ட் இயக்கத்தில் உருவான Ford vs Ferrari திரைப்படம், அமெரிக்க கார் எஞ்சின் டிசைனர் கேரால் ஷெல்பி மற்றும் அதிக வேக ரேஸர் கார் டிரைவரான கென் மைல்ஸ் இருவரின் கதையை பிரம்மாதமாக ஜேம்ஸ் மேன் கோல்ட் இயக்கி உள்ளார். இந்த படம் 4 பிரிவுகளின் கீழ் நாமினேட் ஆகியுள்ளது.

    தற்போது சிறந்த சவுண்ட் எடிட்டிங்கான ஆஸ்கர் விருதை டான் சில்வெஸ்டர் தட்டிச் சென்றுள்ளார்.

    1917, ஜோக்கர், ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட், ஸ்டார் வார்ஸ் உள்ளிட்ட படங்கள் இந்த போட்டியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    சிறந்த எடிட்டிங்கான விருதையும் ஃபோர்டு வி ஃபெராரி திரைப்படம் பெற்றுள்ளது.

    "Ford v Ferrari" - Don Sylvester - Winner

    "Joker" - Alan Robert Murray

    "1917" - Oliver Tarney, Rachel Tate

    "Once Upon a Time in Hollywood" - Wylie Stateman

    "Star Wars: The Rise of SkyWalker" - Matthew Wood, David Acord

    சிறந்த சவுண்ட் மிக்ஸிங்

    சிறந்த சவுண்ட் மிக்ஸிங்

    இந்த ஆண்டு சிறந்த படத்துக்கான போட்டியில் 1917 மற்றும் பாராசைட் படங்களுக்கு இடையே தான் கடும் போட்டி என பலரும் பிரெடிக்‌ஷன் ரிப்போர்ட்களை வெளியிட்டுள்ளனர்.

    சிங்கிள் ஷாட் மூவி என்கிற மாயாஜாலத்தை இயக்குநர் சாம் மெண்டிஸ் இந்த படத்தில் அழகாக மிரட்டியுள்ளார். பத்து பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு தற்போது சிறந்த சவுண்ட் மிக்ஸிங் மற்றும் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது கிடைத்துள்ளது.

    "Ad Astra"

    "Ford v Ferrari"

    "Joker"

    "1917" - Winner

    "Once Upon a Time in Hollywood"

    சிறந்த ஒளிப்பதிவு

    சிறந்த ஒளிப்பதிவு

    92வது ஆஸ்கர் விருது விழாவில் இந்த விருதுக்கான உகந்த படம் என்று சொன்னால், அது 1917 தான். தற்போது சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை தட்டிச் சென்றுள்ளது. முழு படத்தையும், ஒரே ஷாட்டில் எடுத்தது போல, இயக்குநர் சாம் மெண்டிஸ் மிரட்டி இருந்தார்.

    "The Irishman" - Rodrigo Prieto

    "Joker" - Lawrence Sher

    "The Lighthouse" - Jarin Blaschke

    "1917" - Roger Deakins - Winner

    "Once Upon a Time in Hollywood" - Robert Richardson

    சிறந்த மேக்கப் & ஹேர்ஸ்டைல்

    சிறந்த மேக்கப் & ஹேர்ஸ்டைல்

    இயக்குநர் ஜேரோச் இயக்கத்தில் சார்லிஸ் தெரான், மார்கட் ராபி, நிக்கோல் கிட்மேன், ஜான் லித் கோ உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான பாம்ஷெல் படத்திற்கு சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்துக்கான விருதை தட்டிச் சென்றுள்ளது.

    சிறந்த மேக்கப் & ஹேர்ஸ்டைல்

    "Bombshell" - Winner

    "Joker"

    "Judy"

    "Maleficent: Mistress of Evil"

    "1917"

    English summary
    1917 and Ford vs Ferrari movie won the Best cinematography, Best Sound Editing and mixing awards.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X