Don't Miss!
- Automobiles
ஓர் இன்ஸ்டாகிராம் பிரபலம் இப்படியா நடந்து கொள்வது? ஒரு ரீல்ஸ் வீடியோவுக்கு ரூ.17,000 அபராதம் - போலீஸார் அதிரடி
- News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..பலமுனை போட்டியில் வெல்வது யார்?..மாதிரி மின்னணு வாக்குப்பதிவு
- Finance
சோமேட்டோ போட்ட அந்தர் பல்டி.. 10 நிமிட டெலிவரி..!
- Sports
சூர்யகுமார், இஷான் கிஷானுக்கு சரவெடி விருந்து.. நியூசி,உடனான 3வது ODI.. பிட்ச்-ல் உள்ள சர்ஃபரைஸ்!
- Lifestyle
40 வயசு ஆயிடுச்சா? மாரடைப்பு வரக்கூடாதுன்னா இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க...
- Technology
இப்படி செஞ்சா உங்கள் Mobile Apps யார் கண்ணுக்கும் தெரியாது.! சீக்ரெட் மெயின்டைன் செய்ய டிப்ஸ்.!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
Oscars 2022: 94வது ஆஸ்கர் விருது விழா.. இந்தியாவில் எப்போ? எங்கே? எப்படி? பார்க்கலாம்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: 94வது ஆஸ்கர் விருது விழா இந்திய நேரப்படி வரும் மார்ச் 28ம் தேதி நடைபெறுகிறது. அமெரிக்க நேரப்படி மார்ச் 27 ஞாயிற்றுக்கிழமை இரவு கோலாகலமாக ரெட்கார்ப்பெட் நிகழ்வுடன் நடைபெற உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி மாதமே நடைபெற வேண்டிய ஆஸ்கர் விருது விழா நிகழ்ச்சி சற்று தள்ளி வைக்கப்பட்டு மார்ச் இறுதியில் அரங்கேற உள்ளது.
தி பவர் ஆஃப் தி டாக், பெல்ஃபாஸ்ட், வெஸ்ட் சைட் ஸ்டோரி, டூன், நோ டைம் டு டை உள்ளிட்ட ஏகப்பட்ட பெரிய படங்கள் பலத்த போட்டியில் உள்ளன.
ஆஸ்கர்
விருது
வென்ற
மூன்று
பேர்
இணைந்துள்ள
இரவின்
நிழல்...
பர்ஸ்ட்
லுக்
வெளியானது!

94வது ஆஸ்கர்
Academy Awards என அழைக்கப்படும் ஆஸ்கர் விருது விழாவின் 94வது ஆண்டு விழா விரைவில் நடைபெறவிருக்கிறது. மொத்தம் 24 பிரிவுகளுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்கம், சிறந்த நடிகர்கள், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் என அந்த பட்டியல் நீண்டுக் கொண்டே போகும்.

எதிர்பார்க்கும் படங்கள்
ஹாலிவுட்டின் தலை சிறந்த பல படங்கள் இந்த முறை பல பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டு கடும் போட்டியை கொடுத்து வருகின்றன. தி பவர் ஆஃப் தி டாக், பெல்ஃபாஸ்ட், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் வெஸ்ட் சைட் ஸ்டோரி, டூன், ஜேம்ஸ் பாண்ட் படமான நோ டைம் டு டை என பல பெரிய படங்கள் எத்தனை ஆஸ்கர்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லப் போகின்றன என்பதை காத்திருந்து பார்ப்போம்.

இந்திய கனெக்ட்
இதில், டூன் மற்றும் ஜேம்ஸ் பாண்ட் படமான நோ டைம் டு டை ஆகிய இரு படங்களும் சிறந்த விஷுவல் எஃபெகெட்ஸ் பிரிவுகளில் போட்டியிடுகின்றன. அந்த இரு படங்களுக்கும் இந்திய கனெக்ட் கொண்ட DNEG நிறுவனம் பணியாற்றி உள்ளது. அதன் தலைமை பொறுப்பை ஏற்றிருப்பவர் நமித் மல்கோத்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் எப்போ பார்க்கலாம்
மார்ச் 27 ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறும் இந்த விழாவை இந்தியர்கள் மார்ச் 28ம் தேதி திங்கட்கிழமை காலை 5 மணி முதல் கண்டு ரசிக்கலாம். நகைச்சுவை நடிகர்கள் வாண்டா ஸ்கை மற்றும் எமி ஸ்கூமர் இந்த ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்க உள்ளனர்.

எங்கே பார்க்கலாம்
பிரபல ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் லைவ் ஸ்ட்ரீமிங்காக ஆஸ்கர் 2022 நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. மேலும், ஸ்டார் வேர்ல்ட் மற்றும் ஸ்டார் மூவிஸ் தொலைக்காட்சியில் காலை 6.30 மணி முதல் ஆஸ்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கேபிள் டிவி ரசிகர்கள் ஸ்டார் மூவிஸிலும், ஓடிடி ரசிகர்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலும் நிகழ்ச்சியை கண்டு ரசிக்கலாம். அதை தாண்டி ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் வெற்றியாளர்கள் அப்டேட்ஸ் உடனுக்குடன் பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.