»   »  விருதுகள்

விருதுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநர் பாரதிராஜா, பாடகர் ஹரிஹரன் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதுகளும், நடனக் கலைஞர்அலர்மேல்வள்ளி, கர்நாடக இசைப் பாடகர் மதுரை டி.என்.சேஷகோபாலன் ஆகியோருக்கு பத்மபூஷன் விருதும்வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிமத்திய அரசு கெளரவிக்கும்.

அந்த வகையில் இந்த ஆண்டு மொத்தம் 96 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கும் விருதுகள் கிடைத்துள்ளன.

பத்மபூஷன் விருது பெற்ற தமிழகத்தைச்சேர்ந்தோர்: வயலின் கலைஞர் என்.ராஜம், நடனக் கலைஞர் அலர்மேல்வள்ளி, கர்நாடக இசைக் கலைஞர் மதுரைடி.என்.சேஷகோபாலன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.வி.அந்தோணி.

பத்மஸ்ரீ விருது பெற்றோர்: பாடகர் ஹரிஹரன், தடகள வீராங்கனை அஞ்சு ஜார்ஜ், கர்நாடக இசைக் கலைஞர்ஏ.கே.பழனிவேல், புல்லாங்குழல் கலைஞர்கள் குஞ்சுமணி, நீலா, இயக்குநர் பாரதிராஜா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil