»   »  பத்மவிபூஷன் கேஜே ஜேசுதாஸ்!

பத்மவிபூஷன் கேஜே ஜேசுதாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த ஆண்டு பத்ம விருதுகள் பட்டியலில் பிரபல பாடகர் கேஜே ஜேசுதாஸுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் இரண்டாவது உயர்ந்த சிவிலியன் விருது பத்மபூஷன்தான்.

தமிழகத்தில் திரைத்துறையில் இதுவரை நடிகர் ரஜினிகாந்த் மட்டும்தான் இந்த விருதைப் பெற்றிருந்தார். அவருக்கு கடந்த ஆண்டு இந்த விருது வழங்கப்பட்டது.

Padmavibhushan KJ Yesudas

இந்த ஆண்டு கேஜே ஜேசுதாஸ் பெற்றுள்ளார்.

1940-ல் கேரள மாநிலம் கொச்சியில் பிறந்தவர். தாசேட்டன் என்று கேரள மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அவர் கடந்த 1961-ல் பாடகராக தன் வாழ்க்கையை ஆரம்பித்தார். இந்த 77 வயதிலும் திரைத் துறையிலும், கர்நாடக சங்கீதத்திலும் பாடிக்கொண்டுள்ளார்.

இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார்.

தமிழில் பொம்மை என்ற படத்துக்காக எஸ் பாலச்சந்தர் இசையில் முதல் பாடலைப் பாடினார்.

எழுபதுகளில் இந்தியில் பாடத் தொடங்கிய கேஜே ஜேசுதாஸின், பாலிவுட்டையே கிறங்கடித்தார். குறிப்பாக ரவீந்திர ஜெயின் இசையில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் அமுதமாக இனித்தன.

கேஜே ஜேசுதாஸ் சிறந்த பாடகருக்கான மத்திய அரசின் விருதினை ஏழுமுறை பெற்றுள்ளார். இது ஒரு சாதனையாகும்.

கேரள மாநில அரசின் சிறந்த பாடகருக்கான விருதினை 25 முறைப் பெற்றுள்ளார். இதுவும் ஒரு சாதனைதான். தமிழக அரசின் சிறந்த பாடகருக்கான விருதினை 5 முறைப் பெற்றுள்ளார்.

1975-ல் பத்மஸ்ரீ விருது பெற்ற கேஜே ஜேசுதாஸ், 2002-ல் பத்மபூஷன் விருது பெற்றார். இன்று பத்மவிபூஷன் விருதினை அளித்து கவுரவித்துள்ளது மத்திய அரசு.

English summary
Here is a short biography of legendary Singer KJ Yesudas who got Padmavibhushan award.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil