»   »  பாவ்னா-அஜீத்.. பிலிம்பேர்

பாவ்னா-அஜீத்.. பிலிம்பேர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:இந்தியாவின் மிகச் சிறந்த திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான ஷியாம் பெனகலுக்கு கலைத்துறையின் மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்படுகிறது.

இதற்கான அறிவிப்பு இன்று வெளியானது.


அன்கூர், நிஷாந்த், மன்தன், பூமிகா ஆகிய அற்புதமான படைப்புகளைத் தந்தவர் பெனகல். ஓம் பூரி, நஸிருதீன் ஷா, ஷபானா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டீல், அம்ரீஷ் பூரி போன்ற மிகச் சிறந்த கலைஞர்களுக்கு அடையாளம் தந்தவர்.

வாழ்க்கையை தத்ரூபமாகச் சொல்லும் படங்கள் இவருடையவை.

தூர்தர்ஷனுக்காக இவர் படைத்த பாரத் ஏக் கோஜ் என்ற இந்திய வரலாறு-சுற்றுலா தொடர்பான தொடர் இன்றளவும் பாராட்டப்படும் ஒரு படைப்பாகும். ஜவஹர்லால் நேருவின் டிஸ்கவரி ஆப் இந்தியா புத்தகத்தை அடிப்படையாக வைத்து அருமையான படைப்பாக அதை பெனகல் உருவாக்கினார்.

1976ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் 1991ம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும் வென்ற பெனகலுக்கு இப்போது தாதா சாகிப் பால்வே விருது வழங்கப்படவுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil