»   »  ப்ரியாமணிக்கு ஆசிய விருது

ப்ரியாமணிக்கு ஆசிய விருது

Subscribe to Oneindia Tamil

இயக்குநர் அமீரின் கை வண்ணத்தில் உருவாகி சக்கை போடு போட்ட பருத்தி வீரன் படத்துக்கு ஆசிய திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது கிடைத்துள்ளது. அதில் நடித்த ப்ரியா மணிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.

ஆசிய மற்றும் அரபு நாடுகளுக்கான 9வது ஓசியான் சினி ஃபேன் விழா டெல்லியில் நடந்தது. ஆசிய, அரபு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான திரைப்படங்கள் இதில் திரையிடப்பட்டன.

இந்த விழாவில் பருத்தி வீரன் படம் சிறந்த படமாகவும், ப்ரியா மணி சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

ரியாலிட்டியை சினிமாவாக மாற்றி சிறப்பாக உருவாக்கப்பட்ட விஷூவல் விருந்து என பருத்தி வீரன் படத்தை நடுவர் குழு பாராட்டியது. மிகச் சிறந்த நடிப்பை வெளிக்காட்டியதற்காகவும், ஆழமான காதலை அழகாக வெளிக்காட்டியதற்காகவும் ப்ரியா மணிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

அருமையான கிராமத்துக் கதையை அதன் அழகு அம்சங்கள் குறையாமல், படமாக்கியிருந்தார் அமீர். புதுமுகமாக அறிமுகமான கார்த்தி மிகச் சிறப்பாக நடித்திருந்தார். மதுரை பக்கத்து தெனாவட்டும், திமிரும் அவரிடம் அப்படியே பிரதிபலித்தன. நகரத்து நாகரீக மங்கையான ப்ரியா மணியும் முத்தழகு கேரக்டரில் அப்படியே கிராமத்து பெண்ணாக மாறி பிரமிப்பூட்டியிருந்தார்.

ஓசியான் திரைப்பட விழாவின் 5வது நாளன்று பருத்தி வீரன் திரையிடப்பட்டது. பெரும் திரளான ரசிகர்கள் இப்படத்தைப் பார்த்து ரசித்தனர். படத்தைப் பார்த்ததும் அமீர் மற்றும் நடிகர், நடிகைகளை பார்வையாளர்கள் வெகுவாகப் பாராட்டினர்.

அதேபோல இசையமைத்திருந்த யுவன் ஷங்கர் ராஜாவும் பாராட்டுக்களை அள்ளிக் கொண்டார்.

கார்த்திக்கு விருது கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் போட்டியாளர் பட்டியலிலிருந்து கார்த்தியின் பெயர் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர் கே.கே.மேனன் சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டார்.

இது போனா என்ன, தேசிய விருது இருக்குல்ல, அதுல அள்ளிருவோம்ல!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil