»   »  ஆஸ்கர் 2017... ரெட் கார்ப்பெட்டில் பள பள உடையில் ஜொலித்த ப்ரியங்கா சோப்ரா!

ஆஸ்கர் 2017... ரெட் கார்ப்பெட்டில் பள பள உடையில் ஜொலித்த ப்ரியங்கா சோப்ரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

2017-ம் ஆண்டுக்கான 89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் இன்று நடைபெற்றது.

லா லா லேண்ட் படம் 14 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டது. இதில் 6 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. மூன்லைட் மற்றும் மான்செஸ்டர் பை தி ஸீ தலா மூன்று விருதுகளை வென்றன.

Priyanka Chopra's daring dress attracts more at Oscar red carpet

இந்த விழாவில் பிரபல பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோன் கலந்து கொண்டனர். ஆனால் தீபிகா ரெட் கார்ப்பெட் வரவேற்பில் பங்கேற்வில்லை.

ப்ரியங்கா சோப்ரா அசத்தலான உடையில் கலந்துகொண்டார். வெள்ளை மற்றும் வெள்ளி நிறத்திலான கேடயம் போன்ற ஒரு வித்தியாச உடையை அவர் அணிந்து வந்திருந்தார். இந்த உடை அவரது அழகிய உடலை முன்பக்கமும் பின்பக்கமும் கவ்விப் பிடித்திருந்தது. பக்கவாட்டுகளில் திறந்தபடி, அவர் உடல் அழகைக் காட்டியது.

அவரது இந்த உடையும், கவர்ச்சியும் புகைப்படக் கலைஞர்களை அவர் பக்கமே இருக்க வைத்தது. வந்திருந்த விஐபிக்களும் ப்ரியங்காவை வைத்த கண் வாங்காமல் பார்த்தனர்.

English summary
Priyanka Chopra's eye catching dress has pulled the attention of audience and photographers at Oscar 2017 red carpet ceremony.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil