»   »  அமெரிக்கர்களின் மனங்கவர்ந்த முதல் தெற்காசிய நடிகை... பிரியங்கா சோப்ரா!

அமெரிக்கர்களின் மனங்கவர்ந்த முதல் தெற்காசிய நடிகை... பிரியங்கா சோப்ரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: அமெரிக்காவின் 'பீப்பிள் சாய்ஸ் 2016' விருதைக் கைப்பற்றியதன் மூலம் இந்த விருதை வென்ற முதல் தெற்காசிய நடிகை என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா 'குவாண்டிகோ' என்ற அமெரிக்க தொலைக்காட்சித் தொடரில் கடந்த ஆண்டு முதல் நடித்து வருகிறார்.

Priyanka Chopra won People's Choice Awards 2016 For Quantico Series

இந்தத் தொடரின் மூலம் பெரும் புகழையும், பெருமையையும் பெற்ற பிரியங்கா சோப்ரா தற்போது இன்னொரு பெருமைக்கும் சொந்தக்காரராக மாறியிருக்கிறார்.

அதாவது பீப்பிள் சாய்ஸ் 2016 என்ற விருது வழங்கும் விழாவில் சிறந்த அறிமுக நடிகை(தொலைக்காட்சி) என்ற விருதையும் இவர் வென்றிருக்கிறார்.

இதன் மூலம் இந்த விருதை வென்ற முதல் தெற்காசிய நடிகை என்ற பெருமையும் பிரியங்காவிற்கு கிடைத்திருக்கிறது. இந்த விருது வழங்கும் விழாவில் பிரியங்கா சோப்ரா பேசும்போது " எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

இந்தியாவில் இருந்து வந்து ஒரு அமெரிக்க தொலைக்காட்சித் தொடரில் நான் நடிப்பது இதுவே முதல்முறை. நான் நினைக்கிறேன் அமெரிக்க மக்கள் எல்லாவற்றைப் பற்றியும் அறிந்து வைத்திருக்கின்றனர்.

எனது அம்மா, மேனேஜர், குவாண்டிகோ படக்குழுவினர், எழுத்தாளர் மற்றும் ஏபிசி பால் லீ ஆகிய அனைவருக்கும் நான் அளவுக்கு அதிகமாக நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

பிரியங்கா சோப்ராவின் குவாண்டிகோ தொடர் சுமார் 42க்கும் அதிகமான நாடுகளில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடத்தின் ஆரம்பமே அமர்க்களமாக அமைந்ததில் பிரியங்கா சோப்ரா ஹேப்பி அண்ணாச்சி!

English summary
Quantico: People's Choice Awards 2016, Best Debut Actress (TV) Priyanka Chopra won the Award. She Became the First Asian Actress to win the Award.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil