»   »  ஏ.ஆர். ரஹ்மானுக்கு மங்கேஷ்கர் விருது

ஏ.ஆர். ரஹ்மானுக்கு மங்கேஷ்கர் விருது

Subscribe to Oneindia Tamil

பிப்ரவரி 05, 2004

ஏ.ஆர். ரஹ்மானுக்கு மங்கேஷ்கர் விருது

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் இந்திப் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் இருவருக்கும் முறையே லதா மங்கேஷ்கர்மற்றும் கிஷோர் குமார் விருதுகளை மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்தியப் பிரதேச மாநில கலை, கலாச்சாரத் துறை அமைச்சர் லட்சுமிகாந்த் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:

மத்தியப் பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருதைப் பெற ஏ.ஆர். ரஹ்மானும், கிஷோர் குமார் விருது பெற ஜாவேத் அக்தரும்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த விருதில் ரூ.1 லட்சம் ரொக்கமும், பாராட்டுப் பத்திரமும் அடங்கும்.

விருது வழங்கும் விழா எப்போது நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil