»   »  ரஹ்மானுக்கு இன்னும் ஒரு விருது!

ரஹ்மானுக்கு இன்னும் ஒரு விருது!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
மணிரத்னத்தின் 'குரு' படத்துக்காக இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர் விருது இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அட்லாண்டிக் சிட்டியில் உள்ள ட்ரம்ப் தாஜ் மஹால் காஸினோவில் சமீபத்தில் நடந்த விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது.

சிறந்த இந்திய (இந்தி) சினிமா இசைக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து பாலிவுட் மியூசிக் அண்ட் ஃபேஷன் அவார்ட் விருதுகளை ஆண்டுதோறும் அமெரிக்க நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருது ஞாயிற்றுக்கிழமை இரவு அட்லாண்டிக் நகரில் நடந்தது. குரு படத்தில் சிறப்பாக இசையமைத்ததற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விருதைப் பெற ரஹ்மான் அட்லாண்டிக் செல்லவில்லை.

பாலிவுட் பாடகி அலிஷா சினாய் (மேட் இன் இந்தியா புகழ்) இந்த ஆண்டின் சிறந்த பாடகியாக தேர்வு செய்யப்பட்டார்.

'க்யா லவ் ஸ்டோரி ஹை' படத்தில் 'இட்ஸ் ராக்கிங்...' என்ற பாடலைப் பாடியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டின் சிறந்த பாடலுக்கான விருதையும் இந்தப் பாடல்தான் வென்றது.

இவ்விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு முன்னதாக பிரபல பாடகர்கள் குமார் சானு, கவிதா கிருஷ்ணமூர்த்தி, சுக்வீர் சிங் உள்ளிட்டோர் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

Read more about: rahman
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil