»   »  ரஜினிக்கு மராட்டிய விருது

ரஜினிக்கு மராட்டிய விருது

Subscribe to Oneindia Tamil

மகாராஷ்டிர மாநில அரசின் ராஜ்கபூர் விருது நடிகர் ரஜினிகாந்த்துக்குவழங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த். இவரது இயற்பெயர் சிவாஜி ராவ்கெய்க்வாட். மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் என்றாலும் அவரது குடும்பம் பலதலைமுறைகளாக கர்நாடக மாநிலத்தில்தான் வசித்து வருகிறது.

ரஜினிகாந்த் பெங்களூரில் பிறந்தார். அங்கேயே பஸ் கண்டக்டராகவும்பணியாற்றினார். இயக்குனர் கே.பாலச்சந்தரின் கண்ணில் பட்ட அவர் அபூர்வராகங்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார், இன்று தமிழக சூப்பர் ஸ்டாராகவிளங்குகிறார்.


தமிழக அரசின் கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளரஜினிக்கு இப்போது அவரது சொந்த மாநிலமான மகாராஷ்டிரம் புதிய கெளவரத்தைக்கொடுத்துள்ளது.

திரைத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு மகாராஷ்டிர மாநல அரசு ராஜ்கபூர்மற்றும் சாந்தாராம் பெயரில் விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்கான ராஜ்கபூர் விருதுக்கு ரஜினி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மராட்டியநடிகர் அசோக், சாந்தாராம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விருது வழங்கும் விழா வருகிற 30ம் தேதி புனே நகரில் நடைபெறுகிறது. அப்போதுரஜினிக்கும், அசோக்குக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

ராஜ்கபூர் விருது ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பட்டயம் ஆகியவற்றைஉள்ளடக்கியதாகும். சொந்த மாநிலமான மகாராஷ்டிரத்தில் ரஜினிக்கு கிடைக்கும்முதல் பெரிய அங்கீகாரம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil