»   »  தாதா சாஹேப் பால்கே விருதுக்கு 'பத்மாவத்' நடிகர் பரிந்துரை

தாதா சாஹேப் பால்கே விருதுக்கு 'பத்மாவத்' நடிகர் பரிந்துரை

Posted By:
Subscribe to Oneindia Tamil
சர்ச்சையான பத்மாவத்' நடிகருக்கு உயரிய விருது- வீடியோ

மும்பை : நடிகர் ரன்வீர் சிங் சிறந்த நடிப்புக்கான 'தாதா சாஹேப் பால்கே' விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'பத்மாவதி' படத்தில் அலாவுதீன் கில்ஜியாக நடிப்பில் பட்டையைக் கிளப்பிய ரன்வீர் சிங்கை கௌரவப்படுத்தும் விதமாக இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

Ranveer Singh recommended for Dadasaheb Phalke award

கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில், வெளியான 'பத்மாவத்' திரைப்படத்தில் அலாவுதீன் கில்ஜியாக நடிப்பில் மிரட்டிய ரன்வீர் சிங் ரசிகர்களால் பாராட்டப்பட்டார். பத்மாவத் படம் ராஜபுத்திர சமூகத்தினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வெளியாகி வசூல் அள்ளியது.

'பத்மாவத்' படத்தில் சிறப்பாக நடித்து பாராட்டுப் பெற்ற ரன்வீர் சிங் சிறந்த நடிப்புக்கான 'தாதா சாஹேப் பால்கே' விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். விருது தேர்வுக் கமிட்டி, ரன்வீர் சிங் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கடிதம் அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும், ராஜபுத்ர சமூகத்தினரும், இந்துத்வவாதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்த படத்தில் சுல்தானியர்களின் மன்னராக நடித்த ரன்வீர் சிங்குக்கு விருது வழங்கப்படவிருப்பது ராஜபுத்ரர்களின் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

English summary
'Padmaavat' actor Ranveer singh selected for Dadasaheb phalke for Excellence award.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X