»   »  ரீமாவுக்கு சிங்கப்பூர் விருது

ரீமாவுக்கு சிங்கப்பூர் விருது

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரீமா சென்னுக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த அைமப்பு விருது வழங்கவுள்ளது.

தமிழில் மின்னலே படத்தில் அறிமுகமான ரீமா சென் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இப்போது தெலுங்கில் ஸ்ரீகாந்த் மற்றும் வேணு ஹீரோவாக நடிக்கும் யமகோலா படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்தியிலும் சல் சலா சல் படத்தில் கோவிந்தாவுடன் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழில் நான் ரெண்டு, வல்லவன் படத்திற்கு பிறகு தமிழில் வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. இதனால் தமிழில் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

இந் நிலையில் ரீமாவை சிங்கப்பூரில் உள்ள ஒரு அமைப்பு சிறந்த நடிகையாக தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா ஜூலை மாதம் 14ம் நடக்கிறதாம்.

இந்த தகவலை சொன்னது.. ரீமா சென்னே தான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil