twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    19 படங்கள்.... 19 தேசிய விருதுகள்... இயக்குநர் ரிதுபர்னோ கோஷின் சாதனை!

    By Shankar
    |

    கொல்கத்தா: இன்று மரணமடைந்த வங்காள இயக்குநர் ரிதுபர்னோ கோஷ் தன் 49 வயதில் தன் படங்களுக்காக 19 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

    இந்தியாவில் எந்த திரைப்பட இயக்குநரும் செய்யாத சாதனை இது. 20 ஆண்டுகள் மட்டுமே திரைத்துறையில் இயங்கிய ரிதுபர்னோ கோஷ், 19 படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் 2 இந்திப் படங்கள். 4 படங்களில் நடித்துள்ளார்.

    16 படங்களுக்கு தேசிய விருது

    16 படங்களுக்கு தேசிய விருது

    இவரது இயக்கத்தில் வெளியான 19 படங்களில் 16 படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. கிடைத்த தேசிய விருதுகளின் எண்ணிக்கையும் 19-தான். இந்தியில் எப்பேர்ப்பட்ட நடிகராக இருந்தாலும், இவரது வங்காளப் படத்தில் நடித்துவிட ஆர்வம் கொண்டிருந்தனர்.

    ஐஸ்வர்யா ராய்

    ஐஸ்வர்யா ராய்

    அப்படி விரும்பிய நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய். ரிதுபர்னோ கோஷ் இயக்கத்தில் சோக்கர் பாலி எனும் வங்காளப் படத்தில் அவர் நடித்தார். இந்தப் படம் பின்னர் இந்தி, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. சிறந்த வங்க மொழி படத்துக்கான தேசிய விருது இந்தப் படத்துக்கு கிடைத்தது.

    உனிஷே ஏப்ரல்

    உனிஷே ஏப்ரல்

    ரிதுபர்னோ கோஷின் முதல் படம் ஹிரேர் அங்டி-க்கு எந்த விருதும் கிடைக்கவில்லை. ஆனால் இரண்டாவது படம் உனிஷே ஏப்ரல் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வென்றது. தேபஸ்ரீராய்க்கு (மனைவி ரெடி படத்தில் பாண்டியராஜன் ஜோடியாக நடித்தவர் இவர்தான்) கிடைத்த முதல் விருது இது.

    தாஹன்

    தாஹன்

    ரிதுபர்னோ இயக்கிய மூன்றாவது படமான தாஹன் 1997-ல் வெளியானது. இந்தப் படத்துக்கு சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருது ரிதுபர்னோ கோஷூக்கும், சிறந்த நாயகிகளுக்கான விருது இந்திராணி ஹால்டர், ரிதுபர்னா சென்குப்தாவுக்கும் கிடைத்தது.

    பரிவாலி

    பரிவாலி

    இந்தப் படத்துக்கும் இரு தேசிய விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிகைக்கான விருது கிரண் கெர்-க்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது சுதிபா சக்ரபர்த்திக்கும் கிடைத்தது.

    சிறந்த இயக்குநர் முதல் விருது

    சிறந்த இயக்குநர் முதல் விருது

    ரிதுபர்னோ கோஷ் அடுத்து இயக்கிய அசுக், சிறந்த படத்துக்கான விருதினையும், அதற்கடுத்து வெளியிட்ட உத்ஸப் படத்துக்காக சிறந்த இயக்குநர் விருதினையும் வென்றார். சிறந்த இயக்குநராக அவர் பெற்ற முதல் விருது இது.

    2002-ல் அவர் வெளியிட்ட டிட்லி மட்டும் எந்த விருதையும் வெல்லவில்லை.

    ரெயின் கோட்

    ரெயின் கோட்

    ரிதுபர்னோ கோஷ் இயக்கிய முதல் இந்திப் படம் இந்த ரெயின்கோட். இந்தி மொழியில் சிறந்த படத்துக்கான தேசிய விருதினை இந்தப் படம் வென்றது. அடுத்த படமான அந்தர் மஹால் விருதுகள் எதையும் பெறவில்லை.

    முதல் ஆங்கிலப் படம்

    முதல் ஆங்கிலப் படம்

    ரிதுபர்னோ இயக்கிய முதல் ஆங்கிலப் படம் தி லாஸ்ட் லியர். இந்தப் படம் ஆங்கில மொழியில் சிறந்த படத்துக்கான தேசிய விருதை வென்றது. 2008-ல் ரிதுபர்னோ கோஷ் இயக்கிய இரண்டு படங்கள் கேலா மற்றும் ஷோப் சரித்ரோ கல்போனிக். இதில் ஷோப் சரித்ரோ கல்போனிக் சிறந்த மாநில மொழிப் படத்துக்கான தேசிய விருது வென்றது.

    அபோஹோமன்

    அபோஹோமன்

    2010-ல் இந்தப் படம் வெளியானது. சிறந்த இயக்குநர் (ரிதுபர்னோ கோஷ்), சிறந்த நடிகை (அனன்யா சாட்டர்ஜி), சிறந்த படம் ஆகிய மூன்று தேசிய விருதுகளை அள்ளியது இந்தப் படம். அதே ஆண்டில் நௌக்காடுபி என்ப படத்தை வெளியிட்டார். ஆனால் எந்த விருதும் கிடைக்கவில்லை.

    சித்ராங்கதா

    சித்ராங்கதா

    2011-ல் எந்தப் படத்தையும் ரிதுபர்னோ கோஷ் இயக்கவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு இரு படங்களை இயக்கினார். இவற்றில் சன்கிளாஸ் என்ற இந்திப் படமும் ஒன்று. இதற்கு விருது எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் சித்ரங்கதா என்ற வங்காள மொழிப் படத்துக்காக கடந்த ஆண்டின் சிறந்த மாநில மொழிப் படத்துக்கான தேசிய விருதினைப் பெற்றார் ரிதுபர்னோ கோஷ்.

    சர்வதேச அங்கீகாரம்

    சர்வதேச அங்கீகாரம்

    ரிதுபர்னோ கோஷ் படங்கள் இடம்பெறாத சர்வதேச திரைப்பட விழாக்கள் மிகச் சிலதான். அந்த அளவு சர்வதேச அளவில் அவருக்கு அங்கீகாரம் கிடைத்திருந்தது.

    English summary
    Late film maker Rituparno Gosh was won 19 National awards for his 16 movie in his 19 years old career.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X