twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விருதுகள்

    By Staff
    |

    அந்த பேச்சலர்ஸ் பங்களா குதூகலத்தில் நிறைந்திருந்தது. அங்கிருந்தஅனைவர்முகத்திலும் சந்தோஷ ரேகைகள். சில நொடிகளுக்குப்பிறகுவரவேற்பறைக்குள் நுழைந்தோம்..

    வாங்க என்கிற மிகமெதுவான குரல் வரவேற்கிறது. பாலா. 1999-ம் வருட சிறந்ததிரைப்படமான சேது படத்தின் டைரக்டர். விருது கிடைத்திருக்கின்ற மகிழ்ச்சி வீடுமுழுக்க நிறைந்திருக்க, பாலாவிடம் மகிழ்ச்சி தெரிந்தாலும், மிகத் தெளிவாக, சற்றுஇறுக்கமாகவே இருக்கிறார்.

    எதிர்பார்த்த சந்தோஷம் கிடைத்திருக்கிறது. விக்ரமுக்கும், சிவக்குமார் சாருக்கும்விருது கிடைக்காத வருத்தம் கூடவே வருகிறது. வெளியில் இருந்து பார்ப்பதற்கு அதுசினிமா. அதில் உள்ளவர்கள் கதா பாத்திரங்கள். என்னைப் பொருத்தவரை அதுஉயிரோட்டமான விஷயம். எனக்கு பிடிச்ச சீன், ரோல்ன்னு எதையுமே சொல்லிவிடமுடியாது. அந்த படத்தில் உள்ள ஒவ்வொரு சின்னச்சின்ன விஷயங்களும் ரசித்துரசித்து செதுக்கியது என்று தான் சொல்லமுடிகிறது.

    காதல் காட்சியில் இருந்து படத்தின் கடைசி காட்சிவரை ஒவ்வொரு விஷயத்தையும்மிக நுணுக்கமாக யோசித்து செய்தேன. படம் முடிந்து பல நாட்களுக்கு நான் சேதுபடத்தின் காட்சிகளிலேயே மூழ்கிக் கிடந்தேன்.

    உங்களுடைய ஆரம்பகால வாழ்கை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்...

    சொந்த ஊரு நாராயணன் தேவம்பட்டி. கம்பம் அருகில் உள்ள சின்ன கிராமம். பிறந்ததுவளர்ந்தது எல்லாம் அங்கேதான். படித்தது மதுரை, தேனியில். 15 வருஷத்துக்குமுன்னால சினிமாதான் என் லட்சியம்னு வீட்டுல சொல்ல, எல்லோரும் என்னைய ஒருமாதிரி பார்த்தாங்க. பைத்தியம் ஏதும் பிடிச்சிகிச்சா அம்மன் கோயிலுக்கு ஏதும்போகணுமா என்கிற லெவலுக்கு என் அம்மாவின் எண்ணங்கள் சென்றுகொண்டிருந்தது.

    எல்லோருக்கும் தெளிவாக புரிய வைத்து ஆசி வாங்கி வருகிற அளவிற்கு எனக்கும்பொறுமையில்லை. எதிரில் இருந்தவர்களும் கேட்கிற நிலையில் இல்லை. புரியவும்இல்லை. இறுதியில் போய்த்தொலை என்றார்கள். கிட்டதட்ட கைகழுவி விட்டமாதிரி.

    அம்மாவுக்கு என்மீது இருந்த அன்பு பாசம், புள்ள ஏதோ சொல்லுதே எல்லாம்நல்லபடியா நடக்கணுமே என்கிற பாசம் கலந்த கவலையின் வெளிப்பாடு அன்றுகோபமாகவும், அழுகையாகவும் வந்தது. கூடவே வாழ்த்துக்களும் சேர்ந்திருந்ததால்உருப்படியாக ஏதோ செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இன்று அனைவரும்சந்தோஷமாக இருக்கிறார்கள்.

    இந்த வெற்றி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?



    "சேதுவில் அபிதாவுக்கு காட்சியை விளக்கும் பாலா. உடன் விக்ரம்
    வெற்றி.. படம் நல்லா வந்திருந்ததுங்க. அவ்வளவுதான். இப்ப கிடைக்கிற பாராட்டு,வாழ்த்துக்கள் தொடர்ந்து கிடைக்கணும். இந்த வெற்றியை தக்க வைக்கணும் என்கிறகவலையும் இருக்கிறது. அடுத்து என்ன செய்யணும் இதைவிட சிறப்பா என்னசெய்யமுடியும்னு யோசிக்க ஆரம்பிச்சிக்கிட்டு இருக்கேன்.
    அடுத்த படம் நந்தா. சூர்யா தான் ஹீரோ. அந்த படத்தை இன்னும் சிறப்பா செய்ய மிகவேகமாக உழைத்துக்கொண்டிருக்கிறேன்.

    உங்களைப்போலவேதான் பல இளைஞர்கள் சினிமா என்று கிளம்பி வந்துதிசைமாறிவிடுகிறார்கள். அல்லது வாழ்கையை வீணாக்கிக்கொள்கிறார்கள்.எல்லோரும் பாலா மாதிரி வருவதில்லையே?

    ஐய்யோ ஒரு நிமிஷம் இருங்க. எனக்கு கிடைச்ச வெற்றி எனக்கு சந்தோஷத்தையும்,ஊக்கத்தையும் கொடுத்திருக்கிறது அவ்வளவுதான். அடுத்து என்ன செய்வதுஎப்படிச்செய்வது ஜெயிப்பது என்கிற திட்டம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது.அவ்வளவுதான்.

    நான் உதாரணம் சொல்லி பேசுகிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை இன்னும் பலசாதனையாளர்கள் இருக்கிறார்கள். நானும் சிறிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறேன்அவ்வளவுதான்.

    இல்லை ... சினிமா என்று வருகின்றவர்களுக்கு உங்களுடைய வெற்றிஊக்கத்தைக்கொடுத்திருக்கும் என்பதனால் தான் இளைஞர்களுக்கு உங்கள்கருத்துக்களை கேட்கிறோம்.

    நம்பிக்கை என்பது மிகப்பெரிய சக்தி. அந்த நம்பிக்கைக்கு இரண்டு சக்திகள் உண்டு.ஒன்று உயர்த்தும் இன்னொன்று தடுமாற வைத்துவிடும். இதற்கு. முதலில் நமதுகுறிக்கோள் என்ன என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். அடுத்து பாதையைசரியாக இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

    பாதையில் முட்கள் இருந்தால் கையில் குத்தாமல் அந்த முட்களை எப்படி களைவதுஎன்பதில் தெளிவான திட்டம் வேண்டும். இவைகள் சேர்ந்து எதன் மீது நம்பிக்கைவைக்கிறோமோ அந்த நம்பிக்கை வீணாகாது. நிறைய ஆசைப்படுங்கள்.ஆசைப்படதகுதியிருக்கலாம். இல்லாமல் போகலாம். அது வேறு. ஆசைப்படுவதை ஒழுங்குபடுத்துங்கள். அதில் லட்சியம் என்ன என்பதை குறித்துக்கொள்ளுங்கள். முடியாததுஎன்று எதுவுமேயில்லை.

    உண்மைதான். கிழக்கில் உதிக்கின்ற சூரியனை மேற்கில் உதிக்க வைப்பது முடியாதுஎன்று நாம் சொல்ல...

    அதிலும் ஏன் முடியாது என்கிறீர்கள். திசையை மாற்றுவோம். மேற்கை கிழக்காகஎடுத்துக்கொள்வோம் கிழக்கை மேற்கு என்று கொள்வோம். நம் வெற்றிக்காகஎல்லாவற்றையும் மாற்றிக்கொள்வோம். இல்லை, வேண்டாம், முடியாது என்கிறவிஷயங்களை வார்த்தையளவில் தவிர்க்க பழகுங்கள். வெற்றி கிடைக்கும்.

    (பேசிக்கொண்டிருக்கும் பொழுதே போன் மணியடிக்கிறது. தம்பி இன்னிக்கு ஏதும்வேண்டாம். நாளைக்கு வெளியூர் போறேன். வர பதினைந்து நாட்களாகும். வந்த பிறகுநீங்களும் வாங்க பேசுவோம். இப்ப எதுவும் வேண்டாம். பிறகு பேசுவோம்.வாழ்த்துக்கு நன்றி என்று போனில் பேசிவிட்டு தன்னை ரிலாக்ஸாக்கிக்கொள்கிறார்.)

    இதுக்கு என்ன பண்ணச் சொல்றீங்க. போன் பேசினவர் கிட்ட ஒரு சின்ன பிராப்பர்டிஇருக்காம். எனக்குப் பரிசா அந்த சொத்தை என் பெயர்ல எழுதி வைக்கிறேன்னுசொல்றார். ஏன்னு கேட்டா நான் உங்க ரசிகர் சார். சேது படத்துக்காக நான் ஏதாவதுசெய்யணும்னு சொல்லறார்.

    இந்த மாதிரி போன் கால்ஸ், நேரில் பார்ப்பவர்கள் நான் சேது ஹீரோ மாதிரியேவாழறேன், டிரஸ் பண்ணுகிறேன், அது இதுன்னு சொல்லும் பொழுது ஏன் சினிமாவைசினிமான்னு எடுத்துக்கமாட்டேன்கிறாங்கனு தோணுது. சினிமாவை ஒரு வாழ்க்கைமாதிரி எடுப்பது ஒரு படைப்பாளியின் கடமை. அந்த படத்தை ரசித்து பார்த்துஅனுபவிப்பது என்ஜாய் பண்ணுவது பார்ப்பவர்களின் கடமை.

    சில படங்கள் காமடியாகவும் இருக்கலாம். சில படங்கள் சில கருத்துக்களைச்சொல்லலாம். வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டல்களைச் சொல்லலாம்.தேவையானவற்றை எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர அப்படியே வாழ்வதுஅபத்தம்.

    சேது மாதிரி உடலை வருத்திகிட்டு இருக்கார்னு ஒரு ரசிகர் பற்றி தகவல் கிடைத்தது.அவருடைய பெற்றோர்களின் மனது எப்படித் துடித்திருக்கும் என்று நினைத்த பொழுதுஎனக்கு அழுகை தான் வந்தது. இது தவறு.

    காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் பாலா..

    காதல் படம் எடுக்கணும். அதனால் வெற்றி புகழ் எல்லாம் கிடைக்கிறது உண்மை.ஆனால் காதல் என்கிற வார்த்தையிலேயே எனக்கு உடன்பாடில்லை. காதல் என்றால்ஆண் , பெண் இருவருடைய உடலும் , உள்ளமும் பக்குவப்பட்ட பின்பு வருவது தான்காதல்.அதற்கு முன் வருவதெல்லாம் இன்ஃபாக்சுவேஷன். அவ்வளவுதான்.

    நானும் காதலித்தேன். வழக்கம் போல காதல் தோல்வி என்று அப்பொழுதுநினைத்தேன். இப்பொழுது யோசிக்க அது காதலேயில்லைன்னு தோணுது.இன்போஃக்சுவேஷன்.

    சேது படத்தின் வெளிப்பாடுக்கு பின்னணி உங்கள் காதல் தோல்வி தானா?....

    அப்படியில்லை. யாருமே என்னைய காதலிக்கலியே என்கிற ஆதங்கம்.ஏக்கம் பின்புஇந்த இரண்டும் கோபமாக மாறியது. அந்த கோபத்தைக் காட்டிவிட்டேன். ஒருவகையான கோபத்தின் வெளிப்பாடுதான் சேது.

    காதல் பற்றிச்சொன்னீர்கள் நட்பு பற்றி என்ன சொல்லவிரும்புகிறீர்கள்.?

    தாய்மைக்கு அடுத்து நான் மதிக்கின்ற ஒரே உறவு நட்பு. நல்ல நண்பர்கள் கொடுத்தஊக்கம் உற்சாகம் தான் இந்த பாலா. 15 ஆண்டுகளுக்கு முன், சினிமா என்று நான்சொல்ல வீட்டில் கழற்றி விட்டார்கள். அந்த நேரத்தில் கைகொடுத்தது நண்பர்கள் தான்.அந்த நட்பின் வளர்ச்சி தான் இந்த பாலா. அன்று ஊக்கம் கொடுத்தவர்கள் நண்பர்கள்.என்னை அன்றே உணர்ந்து கொண்டவர்களும் அவர்கள் தான்.

    நாம் விடைபெறுகின்ற சமயம் ஒரு பெரிய பொக்கே வந்தது. யாரு என்று பாலாவிசாரிக்க பிரகாஷ் ராஜ் அனுப்பியிருக்கிறார் என்று சொல்ல மிக மெதுவாக கையில்எடுத்து தடவிக்கொள்கிறார். அந்த செயலில் வெற்றியின் ரகசியமும் கூடவே அடுத்தவெற்றிக்கான கவலையும் தெரிந்தது.

    வாழ்த்துக்கள் சொல்லி விடைபெற்றோம்.

    ஹே ராம், சேது, சங்கமம் படங்களுக்கு தேசிய விருதுகள்
    மீண்டும் நிரூபித்த வைரமுத்து

    Read more about: bala cinema sethu sivakumar vikram
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X