»   »  ஷாருக் கானுக்கு பிரெஞ்சு விருது

ஷாருக் கானுக்கு பிரெஞ்சு விருது

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரான்ஸ் அரசு வழங்கும் ஆபிசியர் டேன்ஸ் ஐ ஆர்டர் டெஸ் ஆர்ட் எட் டெஸ் லெட்டர்ஸ் (Officer of the Order of Arts and Letters) விருது கிங் கான் என இந்தி ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஷாருக் கானுக்கு கிடைத்துள்ளது.

திரைப்படத் துறை மூலம் இந்திய, பிரெஞ்சு நட்புக்கு பாடுபட்டதற்காக பிரெஞ்சு அரசு ஷாருக் கானுக்கு இந்த விருதினை வழங்கவுள்ளது.

கடந்த ஆண்டு பிக் பீ அமிதாப் பச்சனுக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான லெஜியன் ஆப் ஹானர் விருது வழங்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்த நிலையில் பிரான்ஸ் அரசின் இன்னொரு உயரிய விருது ஷாருக் கானுக்குக் கிடைத்துள்ளது.

ஷாருக் கானுக்கு கொடுக்கப்படும் விருது குறித்து இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் டொமினிக் கிரார்ட் கூறுகையில், ஷாருக் கான் சிறந்த நடிகர். யாருடனும் ஒப்பிட முடியாத செல்வாக்கு படைத்தவர்.

பிரெஞ்சுத் திரைப்படத் துறையுடன் இணைந்து ஷாருக் கான் சிறந்த பங்காற்றியுள்ளார். அதற்கு நன்றி பாராட்டும் விதமாகவும் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதின் மூலம் திரைப்படத் துறையில், இந்திய, பிரெஞ்சு கூட்டுறவு மேலும் வலுப்படும் என்றார்.

விருது வழங்கப்படும் தேதி குறித்து பிரான்ஸ் அரசு இன்னும் அறிவிக்கவில்லை. பிரெஞ்சு கலை, இலக்கியம், கலாச்சாரம் ஆகிய துறைகளில் சிறந்த ஒத்துழைப்புடன் செயல்படும் வெளிநாட்டினருக்கு இந்த விருதினை பிரான்ஸ் அரசு வழங்குகிறது.

1957ம் ஆண்டு இந்த விருது ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த மகாஸ்வேதா தேவி, ஓவியர் ரஸா, ஹாலிவுட் நடிகர்கள் புரூஸ் வில்லிஸ், உமா துர்மன் ஆகியோருக்கு இந்த விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil