»   »  ஷாருக்கானுக்கு பிரெஞ்சு விருது!

ஷாருக்கானுக்கு பிரெஞ்சு விருது!

Subscribe to Oneindia Tamil
Sharuk khan

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான "Officer of the Order of Arts and Letters" என்ற விருது வழங்கப்படுகிறது.

இந்தியத் திரைப்படத் துறைக்கு ஷாருக் ஆற்றிய சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுவதாக பிரான்ஸ் அரசு கூறியுள்ளது.

இந்தியாவில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தின், பிரெஞ்சு திரைப்படம் மற்றும் டிவி அலுவலக தலைமை அதிகாரி முகம்மது பெண்டஜபார் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கலை, கலாச்சாரம், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு பிரான்ஸ் அரசு இந்த விருதினை அளித்து கெளரவித்து வருகிறது.

ஜனவரி 27ம் தேதி மும்பையில் நடைபெறும் நான்கு நாள் பிரெஞ்சு திரைப்பட விழாவின் தொடக்க விழாவின்போது, இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் ஜெரோம் போன்னபான்ட், ஷாருக் கானுக்கு இந்த விருதினை அளிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 2005ம் ஆண்டு பிரபல திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலாகிருஷ்ணன் இந்த விருதினைப் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டின் உயரிய சிவிலியன் விருதான "The Legion d'Honneur" விருது அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil