»   »  விருதுகள்

விருதுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளையொட்டி நடிகர் சிவாஜி கணேசனுக்கு பசும்பொன் தேவர் விருது வழங்கப்படுகிறது. இவ் விருதை முதல்வர்மு. கருணாநிதி வழங்குகிறார்.

இது தொடர்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த நாள் விழா குழு அமைப்பாளர் ராமகிருஷ்ணன் இதுகுறித்து அளித்த பேட்டி விவரம்:

இந்த ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளை சென்னையில் கொண்டாட முடிவு செய்துள்ளோம். இவரது 93 வது பிறந்தநாளையொட்டிதிங்கள்கிழமை காலை 10 மணிக்கு சென்னை நந்தனம் தேவர் சிலை அருகே குருபூஜை நடக்கிறது.

இதில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் கலந்து கொண்டு ஏழை மக்களுக்குப் பொங்கல் வழங்குகிறார். புதிய நீதிக் கட்சித் தலைவர்ஏ.சி.சண்முகம் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

மாலை 6 மணிக்கு பசும்பொன் தேவரின் 93 வது பிறந்தநாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கிறது. விழாவில் நடிகர் சிவாஜி கணேசனுக்குபசும்பொன் தேவர் விருது வழங்கப்படுகிறது.

இதை முதல்வர் கருணாநிதி வழங்குகிறார். தெய்வம், தேசம் ஆகிய இரண்டும் இரு கண்கள் என்று சிவாஜி கணேசன் வலியுறுத்தி வருவதையொட்டி தேவர்பிறந்தநாள் விழாக்குழுவின் சார்பில் அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது என்றார் ராமகிருஷ்ணன்.

Read more about: actor award chennai shivaji

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil