»   »  சைமா விருதுகள் 2016: சிறந்த நடிகர், நடிகை விருதை வெல்லப்போவது யார்?

சைமா விருதுகள் 2016: சிறந்த நடிகர், நடிகை விருதை வெல்லப்போவது யார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: இந்த ஆண்டிற்கான சைமா விருதுகள் விழா சிங்கப்பூரில் இன்று கோலாகலமாக தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது.

இதில் தென்னிந்திய மொழிப்படங்களுக்கான சிறந்த நடிக, நடிகையர் தொடங்கி மொத்தம் 16 பிரிவுகளில் சிறந்த கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.

விருதுகள் தவிர நடிக, நடிகையரின் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெறும் என்பதால் ரசிகர்கள் விழாவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர்.

தென்னிந்திய நட்சத்திரங்கள்

தென்னிந்திய நட்சத்திரங்கள்

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய நட்சத்திரங்கள் அனைவரும் சிங்கப்பூரில் குவிந்துள்ளனர். இதனால் விருதுகள் விழா நடைபெறும் இடம் ஒரு ஷூட்டிங் ஸ்பாட் போலவே காட்சியளிக்கிறது.

சிறந்த நடிகை

சிறந்த நடிகை

இந்த வருடம் சிறந்த நடிகைக்கான விருது பிரிவில் நித்யா மேனன் (ஓகே கண்மணி), நயன்தாரா(நானும் ரவுடிதான்), ஐஸ்வர்யா ராஜேஷ்(காக்கா முட்டை) , ஜோதிகா(36 வயதினிலே), எமி ஜாக்சன்(ஐ) ஆகியோர் மோதுகின்றனர்.இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், நயன்தாரா இருவருக்கும் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிலிம்பேர் விருதுகள் விழாவில் நயன்தாரா விருதைத் தட்டிச் சென்றதால் சைமாவிலும் நயன்தாரா விருதை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த நடிகர்

சிறந்த நடிகர்

இதுபோல சிறந்த நடிகருக்கான பிரிவில் தனுஷ்(அனேகன்) விக்ரம்(ஐ), ஜெயம் ரவி(தனி ஒருவன்), ராகவா லாரன்ஸ்(காஞ்சனா 2) விஜய் சேதுபதி (ஆரஞ்சு மிட்டாய்) ஆகியோர் மோதுகின்றனர்.இதில் விக்ரமுக்கு ஜெயம் ரவி கடுமையான போட்டியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா-விக்னேஷ் சிவன்

நயன்தாரா-விக்னேஷ் சிவன்

விழாவில் பங்கேற்க இன்று காலை விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் சிங்கப்பூர் ஏர்போர்ட் வந்திறங்கினர். விக்னேஷ் சிவன் டிராலியில் பெட்டி படுக்கைகளை தள்ளிக்கொண்டு செல்ல, நயன்தாரா ஹாயாக ஒரு தோள்பையை மாட்டிக் கொண்டு அவருடன் நடந்து செல்கிறார்.கோலிவுட்டின் ஹாட் ஜோடி என்பதால் இதனை யாரோ ஒரு புண்ணியவான் வீடியோவாக எடுத்து வெளியிட, இந்த வீடியோ தற்போது இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அப்போ இன்னொரு செல்பி கன்பார்ம்...

English summary
SIIMA Awards 2016: Who is Won Best Actress& Best Actor Award? wait and see!
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil