SIIMA Awards 2022...2021 ம் ஆண்டிற்கான பரிந்துரை பட்டியல்..ஆதிக்கம் செலுத்தும் தமிழ் படங்கள்

சென்னை : தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

Recommended Video

Superstar Rajinikanth | 47 ஆண்டுகால Cinema ராஜ்ஜியம், கொண்டாடும் ரசிகர்கள்

தென்னிந்திய திரைப்படங்களையும், அதில் பணியாற்றுபவர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் கெளரவிக்கும் விதமாக சைமா விருதுகள் (South Indian International Movie Awards) 2012 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றாக சைமா விருது கருதப்படுகிறது. மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு மொழி சினிமாக்களுக்கு இது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மொழியிலும் சிறந்த திரைப்படம், இயக்குநர், நடிகர், நடிகை, இசையமைப்பாளர், துணை கதாபாத்திரங்கள் என பல பிரிவுகளில் சைமா விருதுகள் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு சைமா விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நடத்தப்பட்டது.

சைமா விருது விழா எப்போ

சைமா விருது விழா எப்போ

இந்த ஆண்டு சைமா விருதுகள் வழங்கும் விழா செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சைமா விருதுகள் அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைவதால் இந்த ஆண்டு நடக்கும் விழாவை கோலாகலமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

பரிந்துரை பட்டியல் வெளியிடும் சைமா

பரிந்துரை பட்டியல் வெளியிடும் சைமா

இந்நிலையில் சைமா, இந்த ஆண்டு ஒவ்வொரு மொழியிலும், ஒவ்வொரு பிரிவிற்கும் பரிந்துரைக்கப்பட்ட படங்கள், கலைஞர்களின் பட்டியலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. இதில் தமிழில் எந்தெந்த பிரிவுகளில், யார் யார் பரிந்துரைக்கப்பட்ட்டுள்ளனர் என்ற பட்டியல் வெளியிட்டுள்ளது.

சிறந்த படம்

சிறந்த படம்

  • டாக்டர்
  • சார்பட்டா பரம்பரை
  • கர்ணன்
  • மாநாடு
  • தலைவி
  • மண்டேலா
  • ஆகிய 6 படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. 2021 ம் ஆண்டிற்கான விருதுகள் பிரிவில் அதிகபட்சமாக கர்ணன் படம் 10 பிரிவுகளுக்கும், டாக்டர் படம் 9 பிரிவுகளுக்கும், மாஸ்டர் 7 பிரிவுகளுக்கும், தலைவி 7 பிரிவுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

    சிறந்த நடிகர்

    சிறந்த நடிகர்

    • ஆர்யா (சார்பட்டா பரம்பரை),
    • தனுஷ் (கர்ணன்),
    • விஜய் (மாஸ்டர்),
    • சிலம்பரசன் (மாநாடு),
    • சிவகார்த்திகேயன் (டாக்டர்),
    • சூர்யா (ஜெய்பீம்)
    • சிறந்த நடிகை

      சிறந்த நடிகை

      • கங்கனா ரணாவத் (தலைவி),
      • நயன்தாரா (நெற்றிக்கண்),
      • ஜோஸ் லீஜோமோல் (ஜெய்பீம்),
      • கீர்த்தி பாண்டியன் (அன்பிற்கினியாள்),
      • ஐஸ்வர்யா ராஜேஷ் (திட்டம் இரண்டு)
      • சிறந்த டைரக்டர்

        சிறந்த டைரக்டர்

        • நெல்சன் திலீப்குமார் (டாக்டர்)
        • லோகேஷ் கனகராஜ் (மாஸ்டர்)
        • மாரி செல்வராஜ் (கர்ணன்)
        • பா.ரஞ்சித் (சார்பட்டா பரம்பரை)
        • ஏ.எல்.விஜய் (தலைவி)
        • வெங்கட் பிரபு (மாநாடு)
        • சிறந்த வில்லன்

          சிறந்த வில்லன்

          • வினய் ராய் (டாக்டர்)
          • எஸ்.ஜே.சூர்யா (மாநாடு)
          • விஜய் சேதுபதி (மாஸ்டர்)
          • நடராஜன் சுப்ரமணியம் (கர்ணன்)
          • பாரதிராஜா (ராக்கி)
          • அஜ்மல் (நெற்றிக்கண்)
          • சிறந்த காமெடியன்

            சிறந்த காமெடியன்

            • சூரி (அண்ணாத்த)
            • முனிஸ்காந்த் (பேச்சுலர்)
            • ரெடின் கிங்ஸ்லே (டாக்டர்)
            • தீபா ஷங்கர் (டாக்டர்)
            • யோகி பாபு (அரண்மனை 3)
            • சிறந்த துணை நடிகர்

              சிறந்த துணை நடிகர்

              • சமுத்திரக்கனி (தலைவி)
              • லால் (கர்ணன்)
              • மாஸ்டர் மகேந்திரன் (மாஸ்டர்)
              • பசுபதி (சார்பட்டா பரம்பரை)
              • மணிகண்டன் (ஜெய்பீம்)
              • அரவிந்த் சாமி (தலைவி)
              • சிறந்த துணை நடிகை

                சிறந்த துணை நடிகை

                • ரஜிஷா விஜயன் (கர்ணன்)
                • அபர்ணா குமார் (சார்பட்டா பரம்பரை)
                • ஈஸ்வரி ராய் (தேள்)
                • லட்சுமி பிரியா (கர்ணன்)
                • ரவீணா ரவி (ராக்கி)

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X